search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 pound jewelry robbery"

    கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மாதவரம்:

    கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலூர் அருகே பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 57). இவர் வெள்ளளூரில் உள்ள கூட்டுறவு சங்க ரேசன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சாமிநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய சாமிநாதன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    ×