என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3rd teat match"
- ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
- தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல்- வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன்கில், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
லோகேஷ் ராகுல் ரன் குவிக்க திணறியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கிடையே 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டு சுப்மன்கில் இடம் பெற்றார்.
ஆஸ்திரேலியா அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் கம்மின்ஸ், வார்னர் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பெற்றனர்.
கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் ஏற்றார்.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன்கில், புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எஸ்.பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா- ஸ்டீவன் சுமித் (கேப்டன்), கவாஜா, டிராவிஸ் ஹெட், லபுஸ்சேன், ஹேண்ட்ஸ் கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஸ்டார்க், நாதன் லயன், டாட் மர்பி, மேத்யூ குனேமேன்
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்டெல் ஸ்டார்க் வீசினார். இதில் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை.
அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது. ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார்.
அடுத்த புஜாரா களம் வந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் 21 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத் தார். அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை (11.2 ஓவர்) இழந்து திணறியது.
10 மணி நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் இருந்த விராட் கோலி 22 ரன்னிலும், பரத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அக்சார் பட்டேல் 6 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்