என் மலர்
நீங்கள் தேடியது "விடுமுறை"
- வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள்.
- வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
அங்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11, 12-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. எனவே ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.
- பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14,15,16, ஆகிய நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 17-ந் தேதியும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை அதாவது ஜனவரி 13-ம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
- ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
- திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.
சென்னை முதல் நெல்லை வரை அனேக மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.
திருச்சியில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
- விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சில நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவடடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டள்ள புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய மூன்று தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாமாக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
- புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
- புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரிக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 20-ந்தேதி கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
- அதை ஈடு செய்யும் வகையில் இன்ற பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 20-ந்தேதி மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று (23-ந்தேதி) பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.
- கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், ஒரு தலை காதல் விவகாரத்தால், மதன்குமார் என்கிற இளைஞர் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யதார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிக்கு விடுமுறை குறித்து அறிவித்தார்.
மேலும் அவர், "பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு முழுமையாக கவுன்சிலிங் கொடுக்கப்படும்.
கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும். அதன் பிறகே பள்ளி திறக்கப்படும்.
- துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இமாச்சலபிரதேம் மாநிலம் மண்டியில் விடுமுறை கிடைக்காததால் வீடியோ கால் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு ஒப்புக்கொண்டனர்.
இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தால் வீடியோ கால் மூலம் மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர்தில் குன்னூரில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நீலகிரி கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.