என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "7 years in jail"
- பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
- அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பாலம்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி விஜயபிரபா (வயது 44). கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த அவர் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் (51) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலமுருகனின் நண்பரான கண்ணன் (32) என்பவர் விஜயபிரபாவிடம் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜயபிரபா ஏற்கனவே வாங்கிய பணத்தை தராத நிலையில் மீண்டும் எதற்கு பணம் தர வேண்டும்? என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் விஜயபிரபாவை பல இடங்களில் குத்திக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மற்றும் கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
- கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார்.
- இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 35). வெள்ளி பட்டறை தொழிலாளி.
வழிப்பறி
இவர் கடந்த 2019-ம் ஆணடு நவம்பர் மாதம் 7-ந்தேதி சூரமங்கலம் தரைப்பாலத்தில் நடந்து சென்றார்.
அங்கு வந்த கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்போதைய சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மகபூப் அலியை கைது செய்தார்.
7 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சேலம் தலைமை குற்றவியல் நீதிபதி கிறிஸ்டல் பபிதா நேற்று இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கினார். அதில் மகபூப் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனைவும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- புகார் அளிக்க சென்றவரை குத்திக் கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.
- 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.1000 அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் ரேசன் கடையில் வனராஜ் என்பவர் பொருட்கள் வாங்கிய போது அதே ஊரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் முந்தி சென்று பொருட்கள் வாங்கியதால் வனராஜ் மற்றும் யோகேஸ்வரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் யோகேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வனராஜாவை தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புகார் கொடுக்க வனராஜ் மற்றும் அவரது மகன் ஜெயக்குமார் சென்றபோது அங்கு யோகேஸ்வரனின் சகோதரர் தயாநிதி போலீஸ் நிலையம் முன்பாக ஜெயக்குமாரை பீர் பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று தயாநிதி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.1000 அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தயாநிதியை போலீசார் சிறையில் அடைக்க பாதுகாப்புடன் கூட்டிச் சென்றனர்.
- வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி
- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
வேலூர்:
வேலூர் செதுவாலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சொந்தமாக மினி வேனில் தனியார் நிறுவனத்தில் பால் சப்ளை செய்து வந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு இவர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாலை சப்ளை செய்துவிட்டு இலவம்பாடி அருகே உள்ள வடக்கு மேடு மண் ரோட்டில் இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரை மடக்கி கத்தியால் வெட்டி 2 செல்போன் மற்றும் ரூ.450 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் ஓட்டி வந்த வேனையும் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளான வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த காதர் என்கிற அப்துல் காதர் (32), தங்கராஜ், குட்ட சுரேஷ் (39) ஆகியோரை கைது செய்தனர். இதில் தங்கராஜ் இறந்துவிட்டார்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு வக்கீல் பார்த்திபன் வாதாடினார்.
இந்த வழக்கில் மாவட்ட அமர்வு நீதிபதி வசந்த லீலா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் வேன் டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த காதர் என்கிற அப்துல் காதர் மற்றும் குட்ட சுரேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்