search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "83-வது பிறந்தநாள் கொண்டாட்டம்"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உயர்ந்துள்ளது.
    • பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு 7,215 கனஅடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 83 அடியை நெருங்கி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

    • நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக அதிகரித்து உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திபெத்திய மக்களின் விடுதலைக்காக போராடி வரும் புத்த மத தலைவர் தலாய் லாமா இன்று காஷ்மீர் மாநிலத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    ஜம்மு:

    சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடு கடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

    சீன அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தலாய் லாமா, இன்று லடாக் பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார். #DalaiLamabirthday 
    கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் 83 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளுடன் போலீசாரிடம் இன்று பிடிபட்டார். #fakecurrency
    கோவை:

    தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் கள்ளநோட்டுகளின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இன்று கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியே வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கட்டுகட்டாக கள்ளநோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும், ஆனந்தன் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிடிபட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 83 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கள்ளநோட்டுகளின் தயாரிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #fakecurrency

    ×