search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshata Murty"

    • தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
    • பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது கணவருக்கு ஆதரவாக ஒரு அன்பான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், உங்களுக்குள் உள்ள பொதுவான விஷயம் என்ன என்று மக்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிறார்கள். நண்பர்களை மீண்டும் சந்திப்பது, ஸ்பானிஷ் உணவுகளை சாப்பிடுவது, இருவருக்கும் இடையிலான பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், கடின உழைப்பு, வாழ்க்கையில் வெற்றி பெற வழி என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு இன்று உள்ளதை விட சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைப்பது, ஹாரோவில் மக்களின் முக்கியமான மதிப்புகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் எதிர்காலம் பற்றி பேசுவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.


    • அக்‌ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர் பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதி. கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், அக்ஷதா மூர்த்தியின் தந்தை [நாராயண மூர்த்தி]-யின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனின் பணக்கார குடும்பங்களின் வருடாந்திரத் தொகுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 37.196 மில்லியனை எட்டியுள்ளது.

    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்தி
    • அக்‌ஷதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி

    மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    தகவல் தொழில்நுட்ப துறையில் $76 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விளங்கும் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனத்தை, 1981ல் என்ஆர் நாராயண மூர்த்தி, தனது நண்பர்களுடன் துவங்கினார்.

    என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73).

    சுதா மூர்த்தி, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாராயண மூர்த்தி தம்பதியினருக்கு ரோஹன் எனும் மகனும், அக்ஷ்தா எனும் மகளும் உள்ளனர்.

    அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும், தவறான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என சுதா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    நம்மை குறித்து நாம் செய்யும் பணிதான் பேச வேண்டுமே தவிர நாம் அல்ல. உண்மையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம். நமது செயல் தர்மப்படி சரியானதாக இருக்கும் வரையில் பிறரின் மதிப்பீடுகளை குறித்து கவலைப்படாமல் அவற்றில்தான் ஈடுபட வேண்டும். நீங்கள் நேர்மையாக இருந்து, உங்கள் நாட்டிற்கு பணியாற்றி வந்தால் மக்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அதை புறக்கணித்து விடுங்கள். உங்கள் செயலுக்கு எவரும் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; கடவுளே சாட்சி. உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்; அவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். அவர்களின் தகாத வார்த்தைகள் உங்களை சில சமயம் அதிகம் பாதிக்கலாம். அவர்கள் விமர்சித்து பேசினாலும், நீங்கள் உங்கள் கடமையை செய்ய பழகி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுதா மூர்த்தி கூறினார்.

    "குடும்ப உறுப்பினர்கள் எனும் முறையில் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் எங்களுக்குள் உண்டு. ஆனால், அந்த எல்லையை தாண்டி நாங்கள் இரு நாட்டு விஷயங்களை குறித்து பேசுவதில்லை" என நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×