என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "biopic"
- டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது.
- பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகச் இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்துள்ள ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான தனியார் விருது விழாவில் தனது பயோபிக் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக விளாயாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது டிரண்ட் ஆகி வருகிறது. டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ராவிட் -இடம், உங்களின் பயோபிக் படமாக்கப்பட்டால் யாரை உங்களின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனால் விருது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் பயணித்து ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
Rahul Dravid when a question was asked about who can play 'Rahul Dravid' in his biopic. ?❤️pic.twitter.com/B79yANr7E4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 22, 2024
- இந்த படத்துக்கு தற்காலிக தலைப்பாக சிக்ஸ் சிக்ஸர்கள் என இருக்கும் என்று கூறப்படுகிறது.
- யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.
சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக உள்ளது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
யுவராஜின் பலத்தால், இந்தியா 2011-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
- 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
- பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை.
விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், இயக்குநர் மில்டன், விஜய் ஆண்டனி, மெகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்யராஜிடம் மோடி பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடி பயோபிக்-ஐ என் நண்பர் மணிவண்ணன் போன்ற இயக்குனர் இயக்கினால் அப்படியே தத்ரூபமாக எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
- சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களுள் சத்யராஜ் முக்கியமானவர். எந்த கதாப்பாத்திரத்தை கொடுத்தாலும் அவருக்கென தனி பாணியில் அந்த கதாப்பாத்திரத்தை வடிவமைத்து நடிப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில். இன்று மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதல்முறையல்ல 2019 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் அந்த திரைப்படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.
ஆனால் சத்யராஜ் நடிக்கும் படம் ஒரு பான் இந்தியன் படமாக உருவாகவுள்ளது, இந்தாண்டுக்கு படப்பிடிப்பு பணி தொடங்கப்படும் என நம்பப்படுகிறது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .
நாத்திகத்தை பற்றியும், ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாத ஒரு நபர் சத்யராஜ், பெரியாரின் கொள்கையை அதிகம் பின்பற்றுபவர். அவர் எப்படி மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க சம்மத்தித்தார் என நெட்டிசன்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார்
- அண்மைக்காலமாக விஷால் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார்
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் 'ரத்னம்'. இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
அடுத்ததாகக விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார். எனவே, அவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறினார். அதன்பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார் என்பதை வாழ்க்கை வரலாற்று படத்தில் மக்களுக்கு காட்ட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
பாஜக சமீப காலமாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு பிடித்து உள்ளது என்று விஷால் பேசியிருந்தார்.
அதனால் பாஜகவினரான அண்ணாமலை பயோபிக்கில் விஷால் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.
நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருவது உறுதி மற்றவர்களை போல இப்போது வருகிறேன் அப்போது வருகிறேன் என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார்.
இந்த சூழலில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
- இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது.
சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடலுக்கேற்ப திரை உலகில் உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த். 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171-வது படமான 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சஜித்நாடியாவாலா ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதையொட்டி ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசி உள்ளார்.
படத்திற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார்? மற்றும் படப்பிடிப்பு விபரங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
- நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.
இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.
இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.
இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது
- விரைவில் திரைப்படம் குறித்து நல்ல செய்தி அளிப்பேன் என்றார் யுவ்ராஜ்
இந்தியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிலும், சாதனை படைக்கும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் அதிக ஆர்வம் உண்டு.
கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெறுகிறது.
கபில் தேவ், மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவானது.
இந்திய கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக உலக அளவில் சாதனை புரிந்தவர் முன்னாள் வீரர், யுவ்ராஜ் சிங் (Yuvraj Singh). கிரிக்கெட்டில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றவர் அவர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பேசிய அவரிடம், "தற்போது உள்ள கதாநாயகர்களில் உங்கள் வேடத்தில் எவர் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?" என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
சமீபத்தில் நான் "அனிமல்" திரைப்படம் பார்த்தேன். அதில் ரன்பீர் சிங் நடிப்பை கண்டதிலிருந்து எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், திரையில் என்னை பிரதிபலிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனும் முடிவில் உள்ளேன். ஆனால், அது இயக்குனரின் முடிவை பொறுத்தது. இது சம்பந்தமான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து நல்ல செய்தி அளிப்பேன்.
இவ்வாறு யுவ்ராஜ் சிங் கூறினார்.
2011ல் யுவ்ராஜ் சிங்கிற்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று, குணமடைந்து, நாடு திரும்பி மீண்டும் சில மாதங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார்.
- கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.
இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார்.
தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.
இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் 3-6-1930 அன்று பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், பள்ளி இறுதியாண்டு கல்விக்கு பின்னர் 1946-ல் பெங்களூருக்கு சென்று கிறிஸ்தவ தேவாலய பாதிரியாருக்கான பயிற்சி கல்லூரியில் இணைந்தார். அங்கு நிலவிய வேற்றுமைகளை பார்த்து அதிருப்தி அடைந்த அவர், 1949-ம் ஆண்டு வேலைதேடி மும்பை நகருக்கு சென்றார்.
ரெயில்வே துறையில் பணியாற்றியபடி, 1950-1960-ம் ஆண்டுகளுக்கு இடையில் அங்கு சோசலிச தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்கள் நலன்கருதி பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி பிரபலமான தொழிற்சங்க தலைவர் என்னும் தகுதிக்கு உயர்ந்தார்.
1967-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு அசைக்கவே முடியாத சக்தி என அறியப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். பின்னர், அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவிக்காலத்தில் 1974-ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமான போராட்டமாக இன்றளவும் கருதப்படுகிறது.
1975-ம் ஆண்டு அந்நாள் பிரதமரால் ‘மிசா’ எனப்படும் நெருக்கடி நிலை சட்டம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் போலீசாரின் நடவடிக்கையில் சிக்காமல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். இடையில், பரோடா வெடிகுண்டு வழக்கில் கடந்த 1976-ம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1994-ம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் சமதா கட்சி என்னும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சியின் சார்பில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டதாக சமதா கட்சி அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். 2007-ம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.
1967 முதல் 2004 வரை நடைபெற்ற 9 பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் தற்போது தீர்மானித்துள்ளார்.
இந்த படத்துக்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையும் சஞ்சய் ரவுத் தயாரித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது. #SanjayRaut #FilmOnGeorgeFernandes #GeorgeFernandes
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்