search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campaign rally"

    • பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
    • கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டம் மே21-ந் தேதி , உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

    இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்றத் தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, "பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர்.

    இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடு களும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்" என்றார்.

    பா.ஜ.க.வின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர்.

    இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளு மன்றத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சிக்கப்படுகிறது.

    இதன்மூலம், பா.ஜ.க. மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • காவல் துறையினர் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி நடைபெற்றது.
    • பேரணியை ஏற்காடு மகளிர் திட்ட மேலாளர் மகாலிங்கம் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் காவல் துறையினர் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு பிரசார பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஏற்காடு மகளிர் திட்ட மேலாளர் மகாலிங்கம் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், மோகன், பெரியசாமி ஆகியோர் பேரணிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    ஏற்காடு காந்தி பூங்காவில் பேரணி தொடங்கி ஏற்காடு டவுன் வழியாக பஸ் நிலையம் வரை நடந்தது. இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் சென்றனர்.

    இறுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பெண் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஏற்காடு பி.டி.ஓ வெங்கடேசன் மற்றும் மகளிர் குழுவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். #Afghanelectionrally #suicideattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
     
    இதற்கிடையே, ஆப்கன் நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பினர் அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்களே காரணம் என தெரிவித்துள்ளனர். #AfghanElectionRally #SuicideAttack
    ×