search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "controversial speech"

    • கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார்.
    • கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். இதனால் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அப்போது காரில் வந்த பூமண கருணாகர ரெட்டி, எம்.பி. குருமூர்த்தி அவரது மகன் அபிநய ரெட்டி ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது திருப்பதி மலையில் ஆத்திரமூட்டும் வகையில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என விதிமுறை உள்ளதாக போலீசார் நோட்டீஸ் அளித்தனர். தான் எந்த அரசியலும் பேச வரவில்லை, சாமியை தரிசிக்க வந்துள்ளதாக போலீசார் கொடுத்த நோட்டீசில் பூமண கருணாகர ரெட்டி கையெழுத்திட்டார். பின்னர் போலீசார் அவரை மலைக்குச் செல்ல அனுமதித்தனர்.

    திருப்பதி மலைக்கு வந்த பூமண கருணாகர ரெட்டி நேராக வராக சாமியை தரிசனம் செய்தார். பின்னர் புஷ்கரணிக்கு சென்று நீராடி விட்டு மாட வீதி வழியாக கோவில் முன்பாக வந்த அவர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

    அப்போது அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. நெய்யில் கலப்படம் செய்து இருந்தால் என்னுடைய குடும்பம் ரத்த வெள்ளத்தில் அழிந்து போய் இருக்கும் என கூறியபடி கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார். மேலும் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் நெருப்பில் இருப்பது போல் உணர்கிறேன். கோவிலில் கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

    சுத்தப்படுத்த வேண்டியது ஏழுமலையான் கோவிலை அல்ல. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் நாக்கை தான் சுத்தபடுத்த வேண்டும் என்றார். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி மலை மீது அரசியல் மற்றும் அவதூறு பேசக்கூடாது என நோட்டீசில் தெரிவித்திருந்தும் விதிமுறை மீறி பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    பூமண கருணாகர ரெட்டி மீது பக்தர்களின் மனதை புண்படுத்தியது, அநாகரிக, அவதூறு அரசியல் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 

    • ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை.
    • எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சொற் பொழிவாற்றிய திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருப்பூருக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மகாவிஷ்ணுவை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சித்தர்களின் ஆலோசனையின்படியே நான் செயல்படுகிறேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும் என்று தெரிவித்திருந்தார்.

    இதன்படி புழல் சிறையில் உள்ள மகாவிஷ்ணு தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகளுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சிறை வளாகத்தில் வைத்து தன்னுடன் உரையாடும் கைதிகளிடம் வாழ்க்கை முறை என்றால் என்ன என்பது பற்றியும், எதை யெல்லாம் செய்யக் கூடாது? என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறி பாடம் நடத்தியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் எடுத்த போது, ஜாமீன் மனு போடுவதற்காக வந்திருந்த தனது வக்கீலிடம் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மகாவிஷ்ணு அதுபற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதே மனநிலையில்தான் தற்போதும் மகாவிஷ்ணு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எந்த சூழலிலும் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை என்றும், எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம் என்றும் கூறியுள்ள மகாவிஷ்ணு இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல்களை வெளியாகி உள்ளன.

    இது பற்றி போலீசார் கூறும் போது, மகாவிஷ்ணு ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யாத நிலையில் 3 மாதம் வரையில் சிறையில் இருக்க நேரிடும் என்றும் அதன்பிறகே கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் வெளியில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    எந்த வழக்கில் கைதானவர்களாக இருந்தாலும் எப்போது சிறையில் இருந்து வெளியில் செல்லலாம் என்கிற மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் மகா விஷ்ணுவின் நிலைப்பாடு ஆச்சரியம் அளிப்பதாக இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

    • திமுக மாணவரணி சார்பில் இன்று நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
    • அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் இன்று நடைறெ்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.

    அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, " நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்" என குறிப்பிட்டிருந்தார்.

    ஆர்.எஸ்.பாரதி பேசிய இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல.

    கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

    முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார்.

    இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் திரு. ஆர்.எஸ்.பாரதி.

    தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.

    திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

    தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திரு.ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

    தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போல உள்ளனர்.
    • மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போல உள்ளனர்.

    தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளனர் என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு, சாம் பிட்ரோடா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    மேலும்," இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.

    நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா ஏற்கனவே பேசி சர்ச்சையில் சிக்கினார்.

    இந்நிலையில், சாம் பிட்ரோடா மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளார்.

    ×