search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Youth Wing"

    • பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
    • எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது.

    விழாவுக்கு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தளப் பக்கங்களை தொடங்கி வைத்தார். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தள பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் இளைஞரணி 44 ஆண்டுகள் முடிந்து 45-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்கு அணிகள் இருப்பது தி.மு.க. வுக்குதான். தி.மு.க.வில் பல அணிகள் இருந்தாலும் அதில் முதல் அணியாக இளைஞரணி உள்ளது.

    சேலத்தில் வெற்றிகரமாக இளைஞரணி மாநாட்டை நடத்தி காட்டினீர்கள். அதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்தார். இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்தார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதே போலவே தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

    இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ், அண்ணாதுரை இருவரும் டெல்லி சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் 15 நாட்கள் தங்கி பணியாற்றினீர்கள்.

    முதலமைச்சர் இப்போது கோட்டையில் இருந்தாலும், அவரது எண்ணம் இங்குதான் இருக்கும். நேற்று நள்ளிரவு 11 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இளைஞரணி நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

    எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதை தான் அவரும் விரும்புவார். ஏனென்றால் அதற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவ தற்கு இளைஞரணிதான் காரணம்.

    இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பொறுப்புகளில் வருவதற்கு இளைஞரணிதான் அடித்தளம். இளைஞரணிக்கு சமூக வலைதள பக்கம் தொடங்கியுள்ளோம். இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அரசியல் களம் எவளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூக வலைதளம் முக்கியம்.

    சட்டமன்ற தொகுதிகளில் நூலகம் தொடங்கி வருகிறோம். இதுவரை 50 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் விரைவில் தொடங்கப்படும். முதலமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பலர் முன்மொழிந்தீர்கள்.

    ஊடகங்களில் வரும் கிசு... கிசு..., வதந்திகள் உண்மையாகி விடும் என்ற எண்ணத்தில் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பேசுகிறீர்கள்.

    துணை முதலமைச்சர் குறித்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறினேன். எந்த பதவிக்கு வந்தாலும் இளைஞரணியை மறந்து விட மாட்டேன். அதுதான் எனது மனதுக்கு பிடித்தமானது.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படி உழைத்தோமோ அதுபோன்று 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். அந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெண்கள் அதிக அளவு வாக்களித்து இருக்கிறார்கள். அது தி.மு.க. வுக்கு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது.

    இதற்கு காரணம், விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை திட்டமாகும். எனவே அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி 2026-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம்.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். அந்த எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள், எந்த பொறுப்புக்கு சென்றாலும் சனாதனத்தை மறக்க மாட்டேன் என்று பேசினீர்கள் உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா? என்று கேட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறும்போது, பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

    நீட் தேர்வு குறித்த மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நீட் தேர்வுககு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழக அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

    • 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி.
    • அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதிக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
    • பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் உங்களின் பொறுப்பு மாற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுகவினர் பேசி வருகிறார்கள். இளைஞரணி பதவியே மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.
    • எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான்.

    * பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.

    * பிரதமர் மோடியின் வருகையை நிராகரித்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.

    * பாஜக பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது.

    * திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு காரணம்.

    * சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026-லும் தொடர உறுதியேற்போம்.

    * திமுக இளைஞரணியினர் சமூக வலைதங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திற்கு என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

    * எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * இல்லம் தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

    * நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம்.
    • இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026லும் தொடர உறுதியேற்போம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

    திமுக இளைஞர் அணி 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக கழக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் அணிச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

    திமுக இளைஞரணி செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.

    நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம் என்பதை உணர்ந்து, 2026-இல் மீண்டும் நம் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
    • மிச்சாங் புயலால் பாதிப்பை கருத்தில் கொண்டு இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது.

    இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மாநாட்டு ஏற்பாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்திருந்தார்.

    இந்த நிலையில் அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு மாநாடு மீண்டும் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக வருகிற 24-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2007-ல் முதல் மாநில மாநாடு நடைபெற்றது
    • சுமார் 16 வருடத்திற்குப் பிறகு 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிப்பு

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி திமுக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து,

    வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும்.
    • இந்தியாவைக் காக்கும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவைக் காக்கும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • உறுப்பினர் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பின்னர் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்றது.

    முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், நெல்சன், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், சண்முகநாராயணன், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சைமன், சீலன், புதுக்கோட்டை பள்ளி ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த அருள், ஜாய்சன், பிரசன்னா, பிரதிநிதிகள் ஜோஸ்வா, தங்க செல்வன், மற்றும் பரமசிவம், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், உள்ளிட்ட பலர் நிர்வாகிள் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.

    • கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • இளைஞரணி செயலாளர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைபாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், பேரூர் செயலாளர்கள் ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபிபாலசுப்பிரமணியன், புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றியம் லாலாசங்கரபாண்டியன், புளியங்குடி அந்தோணிசாமி, ராயகிரி விவேகானந்தன், சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மருதுபாண்டியன், ஆயில்ராஜா பாண்டியன், தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் கிப்ஸ்சன், பேட்டரிக் பாபு, நல்லசிவன், கந்தவேல், மாரித்துரை, ராமச்சந்திரன், இளையராஜா, புல்லட் கணேசன், மகளிர் அணி கிருஷ்ணலீலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • மானூர் பகுதியில்அம்பலமான சுவாமி கோவிலின் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் இன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் பகுதியில் அம்பலமான சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி நெல்லை கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் இன்று ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. டவுன் உழவர் சந்தை அருகே உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் நடந்த இந்த விழாவில் தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆறுமுகராஜா கலந்து கொண்டு ஆதரவற்ற பெண் குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அவர் மானூர் அருகே உள்ள மாவடி சமுதாய நலக்கூட வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டார். இதில் மாவடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது இப்ராகிம் தன்சில் ரோஸ், துணைத் தலைவர் மாரிச்செல்வி, விவசாய சங்க தலைவர் முகமது இப்ராகிம், மாவடி முருகன், ஆட்டோ கருப்பசாமி, சங்கரபாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×