search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug awareness rally"

    • போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்.
    • இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த 11-ந் தேதி முதல் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட மருந்தக உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷ னர் மோகன்ராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் சிக்னல், அரசு மருத்துவமனை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர்.

    மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட மருந்தக விற்பனை சங்க தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் சரவணன், நிர்வாக செயலாளர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்,இளையோர் செஞ்சிலுவை சங்கம்,செஞ்சுருள் சங்கம் இனணந்து புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது.

    முதல்வர் ஹேமலதா முன்னிலையில் பேரணியை பெரியபட்டிணம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியபடி சென்றனர்.

    வழி நெடுகிலும் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர்.

    பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், செஞ்சுருள் சங்க ஒருங்கி ணைப்பாளர் கவுதமராஜ், ஆங்கில துறை தலைவர் சீனி அப்துல் சமது மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ×