search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "European Football"

    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
    • ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது.

     


    இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமால் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதனால் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.

    இதோடு, நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்காக கோல் அடித்த யமாலுக்கு 16 வயது 362 நாட்கள் ஆகும். இதன் மூலம் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை யமால் படைத்துள்ளார்.

    முன்னதாக பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது வேல்சுக்கு எதிராக தனது 17 வயது 239 நாட்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.

    • கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.
    • யூரோ கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் ஆனார் ஸ்பெயின் அணியின் யமால்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் ராண்டல் கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.

     


    துவக்கத்திலேயே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் யமால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த போட்டில் சமனில் சென்று கொண்டிருந்தது. இந்த கோலை தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது.

    போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது.

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரு போட்டிகளில் ஹங்கேரி தோல்வியை தழுவி இருந்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஹங்கேரி அணிகள் இடையிலான போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    நடப்பு யூரோ கோப்பையின் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஹங்கேரி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஸ்காட்லாந்து அணியும் இதேபோன்ற சூழலில் போட்டியில் களமிறங்கியது.

    அந்த வகையில், இரு அணிகளும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சமயத்தில் ஹங்கேரி வீரர் கெவின் சோபோத் கோல் அடிக்க அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    போட்டி முடிவில் ஸ்காட்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஹங்கேரி அணி 1-0 என்ற வகையில் வெற்றி பெற்றது. 

    • துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
    • பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

    இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது.

    போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றி பெற்றது.

    • கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
    • செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெற்ற க்ரூப் எஃப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் இளம் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

    21 வயதான போர்ச்சுகல் வீரர் எல்லை கோட்டின் அருகில் வைத்து அடித்த ஷாட்-ஐ செக் குடியரசு வீரர்களால் சரியாக தடுக்க முடியாமல் போனது. இது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் போர்ச்சுகல் அணி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

    துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், போராடிய செக் குடியரசு வீரர்கள் கடும் போட்டியை ஏற்படுத்தினர். கிடைக்கும் இடங்களில் கோல் அடிக்கும் முயற்சியில் செக் குடியரசு வீரர்கள் ஈடுபட்டனர். இதன் பலனாக போட்டியின் 60-வது நிமிடத்தில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.

    இதைத் தொடர்ந்து செக் குடியரசு வீரர் ராபின் ரனாக் செய்த தவறு காரணமாக எதிரணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இரு அணிகளும் ஒரு கோல் என்ற நிலைக்கு வந்ததும், போட்டி சமனில் முடிய கூடாது என்ற எண்ணத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.

    பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 6-வது யூரோ கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், நேற்றைய போட்டியில் அவரது ஷாட்கள் எதையும் கோலாக மாறாமல் எதிரணி கோல் கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் பார்த்துக் கொண்டார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.

    இதையடுத்து இரு அணி வீரர்களும் தங்கள் அணிக்கு ஒரு கோல் அடிக்க போராடினர். எனினும், போர்ச்சுகல் அணியின் கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை கொடுத்தது. 

    ×