search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executives"

    • நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும்.
    • மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர்.
    • ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ‘கருப்பு ஆடுகள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நடந்து முடிந்த புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இதனால் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.

    ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    'நீங்கள் பா.ஜனதாவுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்கிரஸ் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந் தால்போதும் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகிவிட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.

    இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.
    • கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எத்தனைபேர் எத்தனை சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர் என அறிக்கையாக வெளியிடவேண்டும்.

    காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைந்து அருகில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொழிற்சாலை சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குழந்தை தொழிலாளர் ஒருவர் விபத்தில் இறந்துள்ளார். குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தியது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்தை செய்த நிறுவன உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம், விஜயபூபதி, லட்சுமணன், பரசு, வெங்கடேசன், நமச்சிவாயம், திருமால், நடராஜ், கார்த்தி, முருகன், வேலு, கனகவள்ளி, வள்ளி, ஜெயா, கல்விக்கரசி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்ஸ் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சங்கப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கத்தின் வரவு - செலவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் சங்க புதிய தலைவராக எம். கார்த்திகேயன், செயலாளராக இளங்கோ, பொருளாளராக வில்லியம், துணைத்தலைவர்களாக கதிர்வேல், சுப்பிரமணிய சிவா, துணைச்செயலாளர்களாக சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ரமேஷ், சுப்பிரமணி, வேணுகோபால், பழனிச்சாமி ,ஜீவானந்தம் ,முருகநாதன், ஜெயபாலன் மற்றும் பலர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு திருப்பூர்,பல்லடம்,அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டோகிராபர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திரளான அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி தலைமை கழகம் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அறிவித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைச் செயலாளர் ரெங்கசாமி பேச உள்ளார். அதனால் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, மூத்தகுடி ரகுபதி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீத்தாராமன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், இலக்கி அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேலு, ராமச்சந்திரன், கலியமூர்த்தி, பாலு, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி, முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
    • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

    மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

    இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

    இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை சோழவந்தான் அருகே பா.ஜ.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க கூட்டமும், தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. மண்டல் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குகனேஷ்வரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் மாவட்ட செயலாளர் கண்ணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல் சாமி, மாவட்ட நிர்வாகி கோசா பெருமாள் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, தேவி, வர்த்தக அணி தசரத சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×