search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For farmers"

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்ககிரி:

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதனையடுத்து வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார ஆத்ம குழு தலைவர்கள் ராஜேஷ் (சங்ககிரி), பரமசிவம் (கொங்கணாபுரம்), பச்சமுத்து (மகுடஞ்சாவடி), நல்லதம்பி (எடப்பாடி) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்கள்.

    மேலும், உதவி பொறியாளர்கள் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரி ஆகியோர் அரசு திட்டங்கள், பவர் டிரில்லர்களின் பயன்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

    • விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
    • உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந

    டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    விருப்பமுள்ள விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக

    பயன்பாட்டிற்கு கொண்டு

    வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்

    மோட்டார் பொருத்திக்

    கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன அடி அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தெரிவித்து உள்ளார். 

    • சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
    • நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டங்களில் உள்ள 370 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 லேம்ப் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 1 உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம். மேலும் இதுவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்று கொள்ளலாம்.

    கடன் மனுவுடன் நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று இணைக்க வேண்டும். நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று பெற இயலாத நேர்வில், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சென்ற ஆண்டு பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் பெற்று நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் குறித்து சுய உறுதிமொழி சான்றுடன்விண்ணப்பிக்க வேண்டும்.

    நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப நிலம் அல்லது குடியிருப்பு பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிர்க்கடன் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    ×