search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hema Commission"

    • அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப் பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்ட ரீதியாக கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இதில் 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்குபாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவர், அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை என்ற போர்வையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

    ஏற்கனவே ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி மனுத்தாகக்ல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹேமா கமிஷனின் அறிக்கை மலையாள திரையுலகில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகைகள் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர். 

    • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
    • இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    கேரள திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இயக்குநர் ரஞ்சித் நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் என பலர் இந்த புகார்களில் சிக்கியுள்ளனர். நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர்.

    அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது, சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது திரைத்துறையிலும் உள்ளது, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் முன் உள்ளது.

    இதுகுறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்குப்பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் [பவர்ஹவுஸ்] என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும், தீர்வுகளையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    ×