search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jan suraaj"

    • பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பாட்னா:

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், தனது கட்சிக்கான நிதி தேவை குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பொதுமக்களிடம் நன்கொடை கேட்போம். பீகார் முழுவதும் 2 கோடி பேர் தலா ரூ.100 வீதம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விதத்தில் ரூ.200 கோடி எளிதாக திரட்டலாம். தேர்தல் நெருங்கும்போது இன்னும் அதிகமாக கூட கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • பிரசாந்த் கிஷோர், தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும்.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.

    அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

    இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.

    ×