search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanjanur agneeshwarar"

    • சுக்கிர திசை பாதிப்பு குறைய, செல்வவளம் மிளிர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய,
    • உயர் பதவிகள் கிடைக்க தொழிலில் மேன்மை உண்டாக சுக்கிர பகவானின் 108 போற்றிகள் சொல்ல வேண்டும்.

    சுக்கிர திசை பாதிப்பு குறைய, செல்வவளம் மிளிர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய, உயர் பதவிகள் கிடைக்க செய்யும் தொழிலில் மேன்மை உண்டாக சுக்கிர பகவானின் 108 போற்றிகள் சொல்ல வேண்டும்.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இந்த 108 போற்றியைச் சொல்ல, சொல்ல அனைத்து நலங்களும் வளங்களும் நிறையும்.

    1.ஓம் அசுர குருவே போற்றி

    2.ஓம் அரியசக்தி வாய்ந்தவனே போற்றி

    3.ஓம் அழகனே போற்றி

    4.ஓம் அரங்கத்து அருள்பவனே போற்றி

    5.ஓம் அந்தணனே போற்றி

    6.ஓம் அத்தி சமித்தனே போற்றி

    7.ஓம் அவுணர் அமைச்சனே போற்றி

    8.ஓம் அந்தகனுக்கு உதவியவனே போற்றி

    9.ஓம் ஆறாம் கிரகனே போற்றி

    10.ஓம் ஆச்சாரியனே போற்றி

    11.ஓம் இருகரனே போற்றி

    12.ஓம் இனிப்புச் சுவையனே போற்றி

    13.ஓம் இந்திரியமானவனே போற்றி

    14.ஓம் இல்லறக் காவலே போற்றி

    15.ஓம் இரு பிறையுளானே போற்றி

    16.ஓம் ஈர்க்கும் மீனே போற்றி

    17.ஒம் உல்லாசனே போற்றி

    18.ஓம் உற்றோர்க் காவலே போற்றி

    19.ஓம் ஒரு கண்ணனே போற்றி

    20.ஓம் ஒளி மிக்கவனே போற்றி

    21.ஓம் கசன் குருவே போற்றி

    22.ஓம் கசனால் மீண்டவனே போற்றி

    23.ஓம் கலை நாயகனே போற்றி

    24.ஓம் கலைவளர்ப்போனே போற்றி

    25.ஓம் கருடவாகனனே போற்றி

    26.ஓம் கமண்டலதாரியே போற்றி

    27.ஓம் களத்ர காரகனே போற்றி

    28.ஓம் கயமுகன் தந்தையே போற்றி

    29.ஓம் காவியனே போற்றி

    30.ஓம் கனகம் ஈவோனே போற்றி

    31.ஓம் கீழ்திசையனே போற்றி

    32.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி

    33.ஓம் கிரகாதிபனே போற்றி

    34.ஓம் சடை முடியனே போற்றி

    35.ஓம் சங்கடம் தீர்ப்போனே போற்றி

    36.ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி

    37.ஓம் சந்திரன் ஆகானே போற்றி

    38.ஓம் சத்ரு நாசகனே போற்றி

    39.ஓம் சிவனடியானே போற்றி

    40.ஓம் சிவன் உதரத்து இருந்தவனே போற்றி

    41.ஓம் சுக்கிரனே போற்றி

    42.ஓம் சுந்தரனே போற்றி

    43.ஓம் "சுக்கிர நீதி' அருளியவனே போற்றி

    44.ஓம் சுரர்ப் பகைவனே போற்றி

    45.ஓம் சுகப்பிரியனே போற்றி

    46.ஓம் செழிப்பிப்பவனே போற்றி

    47.ஓம் தவயோகனே போற்றி

    48.ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி

    49.ஓம் திங்கள் பகையே போற்றி

    50.ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி

    51.ஓம் துலாராசி அதிபதியே போற்றி

    52.ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி

    53.ஓம் தேவயானி தந்தையே போற்றி

    54.ஓம் தூமகேதுக்கு அருளியவனே போற்றி

    55.ஓம் நாரடப்படுபவனே போற்றி

    56.ஓம் நாடளிப்பவனே போற்றி

    57.ஓம் நாற்கரனே போற்றி

    58.ஓம் நீண்ட தசாகாலனே போற்றி

    59.ஓம் நுண்கலைத் தேவனே போற்றி

    60.ஓம் நெடியவனே போற்றி

    61.ஓம் பரணி நாதனே போற்றி

    62.ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி

    63.ஓம் பத்துபரித்தேரனே போற்றி

    64.ஓம் பஞ்சகோணப்பீடனே போற்றி

    65.ஓம் பிரகாசிப்பவனே போற்றி

    66.ஓம் பிருகு குமாரனே போற்றி

    67.ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி

    68.ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி

    69.ஓம் புதன் மித்ரனே போற்றி

    70.ஓம் புகழளிப்பவனே போற்றி

    71.ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி

    72.ஓம் பூமியன்ன கோளே போற்றி

    73.ஓம் பூரத்ததிபதியே போற்றி

    74.ஓம் பூராட நாதனே போற்றி

    75.ஓம் பெண்பால் கிரகமே போற்றி

    76.ஓம் பேராற்றலானே போற்றி

    77.ஓம் மழைக் கோளே போற்றி

    78.ஓம் மலடு நீக்கியே போற்றி

    79.ஓம் மரவுரி ஆடையனே போற்றி

    80.ஓம் மாமேதையே போற்றி

    81.ஓம் மாண்டு மீண்டவனே போற்றி

    82.ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி

    83.ஓம் மாவலியின் குருவே போற்றி

    84.ஓம் மாலோடு இணைந்து

    அருள்பவனே போற்றி

    85.ஓம் மீனத்தில் உச்சனே போற்றி

    86.ஓம் மிருத்யு நாசகனே போற்றி

    87.ஓம் மோகனனே போற்றி

    88.ஓம் மொச்சைப் பிரியனே போற்றி

    89.ஓம் யயாதி மாமனே போற்றி

    90.ஓம் எம பயம் அழிப்பவனே போற்றி

    91.ஓம் ரவிப் பகைவனே போற்றி

    92.ஓம் ரிஷப ராசி அதிபதியே போற்றி

    93.ஓம் வண்டானவனே போற்றி

    94.ஓம் வரத ஹஸ்தனே போற்றி

    95.ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி

    96.ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி

    97.ஓம் விடிவெள்ளியே போற்றி

    98.ஓம் "விபுதை'ப் பிரியனே போற்றி

    99.ஓம் வெண்ணிறனே போற்றி

    100.ஓம் வெள்ளி உலோகனே போற்றி

    101.ஓம் வெண் குடையனே போற்றி

    102.ஓம் வெள்ளாடையனே போற்றி

    103.ஓம் வெண் கொடியனே போற்றி

    104.ஓம் வெள்ளித் தேரனே போற்றி

    105.ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி

    106.ஓம் வைரம் விரும்பியே போற்றி

    107.ஓம் "ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி

    108.ஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி

    எங்களுக்கு நாளும் வாழ வளம் தந்தருளும் அருள்மிகு ஸ்ரீசுக்கிர பகவானின் திருவடிகளே சரணம்!

    • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.
    • அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

    1. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலாகும்.

    2. இது மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது.

    3. காவிரியின் வடகரை ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    4. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன.

    5. பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரி என்னும் பல பெயர்களால் கஞ்சனூர் அழைக்கப்படுகிறது.

    6. 1,500 ஆண்டு காலத்திற்கு முன்னதாக, மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய சீர்காழியில் அவதரித்த சைவசமயக்குரவர் நால்வரில் முதல்வரும், சைவ சமயத்தின் தனிப்பெருந் தலைவருமான திருஞான சம்பந்தப்பெருமான் எழுந்தருளி தரிசித்த தலம் இது.

    7. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளில் இத்தலம் "விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றார், நாட்டுக் கஞ்சனூர் என்றும், இறைவன் அக்னீஸ்வரம் உடையார் என்றும்" குறிக்கப்பெற்றுள்ளன.

    8. இத்தலத்தின் மூர்த்தியின் நாமம் சுக்கிர பகவான் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆகும். அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

    9. ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்து அற்புதங்கள் பல செய்த திருத்தலம் இது. இந்த ஸ்தலத்தில் பராசர முனிவருக்கு ஏற்பட்ட சித்தப்பிரமை நீங்கியது.

    10. பிரமதேவருக்கு திருமணக்கோலக் காட்சி கிடைத்தது. அக்னிக்கு பாண்டுரோகம் தீர்ந்தது. கம்சனுக்கு மூத்திர நோய் தீர்ந்தது.

    11. மாண்டவ்யப் புத்திரர்களுக்கு மாத்ரு ஹத்தி தோஷம் நீங்கி மோட்சம் கிடைத்தது. சந்திரனுக்கு சாபம் நீங்கியது. கலிக்காம நாயனாருக்குத் திருமணம் நடந்தது.

    12. விருத்தன் என்ற பிராமணனுக்கும், காளகண்டன் என்ற வேடனுக்கும் மோட்சம் கிடைத்தது. சித்திரசேனன் என்ற கந்தர்வனின் சாபமும் விஷ்ணுவின் சாபமும் நீங்கின.

    13. மானக்கஞ்சாறர், ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் துறையூர் வீரமார்த்தாண்ட மன்னன், மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னன், பாண்டியப் பேரரசி மங்கையர்க்கரசியார் முதல் அமைச்சர், குலச்சிறையர் வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகள், மார்க்கண்டேயர், சுரைக்காய் பக்தர், அக்னிசிங்க மகாராஜா போன்ற பெருமக்கள் கஞ்சனூர் தலத்தில் வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள்.

    14. மூலவராகிய சுக்கிர பகவானாக விளங்கும் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தி, பலாச வனத்தில் பூமியின் உள்ளிருந்து தானே தோன்றியவர்.

    15. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.

    16. மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 284ம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த குருமகா சன்னிதானம் முதல் 288வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வரை, அவர்களால் திருப்பணிகள் பல செய்விக்கப் பெற்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு.
    • அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்' என்றார்.

    கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார்.

    அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது.

    பசுங்கன்றைக் கொன்ற தால், அவனை மகா பாவி என்று பலரும் ஒதுக்கினார்கள்.

    இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறு வதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவ சர்மா.

    அங்கு வீட்டுக்குள் நுழைந்த போது, வாசல்படி தலையில் இடித்து 'சிவ, சிவா' என்று கத்தினான்.

    குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார்.

    பின்னர், 'நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் எல்லாம் நீங்கிவிட்டது.

    இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப்போகிறது' என்று தேவ சர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

    ஆனாலும் கூட ஊர் மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை.

    ஊரை விட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.

    ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்தார்.

    அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

    அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, 'நீ சிவ... சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கி விட்டதாக நான் கூறினேன்.

    ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை.

    எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு.

    அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்' என்றார்.

    அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர்.

    'கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்' என்பதால் வந்த நகைப்பு அது.

    ஆனால் ஹரதத் தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், 'இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்' என்று மனமுருக வேண்டினார்.

    என்ன ஆச்சரியம், தேவ சர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது.

    அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மன தார வழிபட்டனர்.

    • என் பெயர் மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.
    • நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்று கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான்.

    ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது.

    கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாக தெரியாததால் சுவாமியை தியானித்தார்.

    அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, நான் இவ்வூரில் வசிக்கும் இடையன்.

    என் பெயர் மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.

    தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்று கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான்.

    கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த அந்த இடையன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன் வீடிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார்.

    அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாக கூறிவிட்டு விடை பெற்றுச்சென்றான்.

    இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறையிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித் தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறி விட்டு மறைந்தருளினார்.

    மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார்.

    அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர்.

    அப்போது பெருமான் அசரீரியாக, நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்துவிட்டு கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாக சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக்கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம் என்றருளினார்.

    இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர், பெருமாளின் திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார்.

    • நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும்.
    • இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.

    ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.

    தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள்.

    அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய்.

    நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும்.

    இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.

    இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார்.

    அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர்.

    ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திரு விளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.

    • இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோவிலிலும் உள்ளது.
    • பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

    ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது.

    தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது.

    இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.

    இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோவிலிலும் உள்ளது.

    பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

    நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

    • வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.
    • தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.

    தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவ லிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார்.

    வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.

    தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.

    தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.

    அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வூரிலுள்ள வரத ராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும்.

    முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.

    • குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.
    • சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.

    சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான்.

    இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்

    சிவபெருமான் சுதர்சனரிடம் "அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று சொன்னார்.

    குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.

    சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.

    அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார்.

    பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம்.

    உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.

    • நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை.
    • மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை.

    பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு.

    நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை.

    மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை.

    மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.

    தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார்.

    நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.

    • அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
    • வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.

    முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது.

    அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.

    வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.

    சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது.

    வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது.

    எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.

    சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது.

    ×