search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • குருமூர்த்தியிடம் சிலர் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டனர்.
    • தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

    மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளராகவும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார்.

    இதற்கிடையே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும் நபர்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக குருமூர்த்திக்கும், மற்ற பயிற்சி பள்ளிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. சிலர் குருமூர்த்தியிடம் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள் பட 6 பேர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் குருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் பவுல் ஏசுதாஸ், பலத்த காயம் அடைந்த குருமூர்த் தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் குருமூர்த்தி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தலைமறைவான வேல்முருகன் உள்பட 6 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளைத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
    • நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள்.

    சென்னை:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

    முன்னதாக, பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார்.

    • மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
    • தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பேசினர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாசலம், புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சந்திர மோகன் மற்றும் தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனையும் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினர்.

    • திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர் எழுத்தாளர் மணி எம்.கே. மணி.
    • எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர்.
    • திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்தவர்.

    தமிழ் திரையுலகில் தனது புதுமையான படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களை அடையாளம் கண்டவர். கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர். இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் இன்று.

    திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்தவர். கே.பி. என்றும் இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பிறந்த கே. பாலச்சந்தர் 2014-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.

     

    இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கே.பாலசந்தர் பிறந்தநாளை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "Thank you #KBSir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக!" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
    • தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.

    ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    சென்னை:

    நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    • தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் கமல் கட்சிவெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கியவர் கமல்ஹாசன். தி.மு.க.,

    அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கமல்ஹாசன் கூறி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெற்றது.

    இதைத் தொடர்ந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் சில கட்சிகளோடு கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் கள மிறங்கியது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அங்கு அதிக வாக்குகளை வாங்கிய அவர் பா.ஜ.க. வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தேர்தலிலும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் அமைந்திருந்தது.

    இது தொடர்பாக அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கமல்ஹாசன் ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இப்படி தேர்தல் களத்தில் மிகவும் ஆவேசமாக காணப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி அரசியல் பக்கம் அவர் செல்லமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கமல்ஹாசனோ நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றார். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு கூட்டணியில் இடம் கிடைத்தது.


    ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்க வில்லை. ஒரு மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் வரும் நாட்களில் மேல் சபை எம்.பி.யாக டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சில இடங்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. கூட்டணியிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ளது. இப்படி கூட்டணி அரசியலால் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள் நீதி மய்யம் கட்சி திசை மாறி பயணிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே இந்த இரண்டு கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் மேற்கொள்ள வேண்டியகட்டாயத்தில் உள்ளன.

    ஏனென்றால் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகிற நாட்களில் இந்த கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த திட்டமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பி.யாக அவர் பதவி வகிக்கும் பட்சத்தில் நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

    இதனால் தி.மு.க. சார்பில் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. மாற்றத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன் கட்சியை வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கூட்டணி அரசியலுக்குள் முடங்கிப் போய் இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாற்றத்தை நோக்கி பயணித்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் சென்றதன் மூலம் இனி அவரது பழைய பயணம் தடைபடும் என்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி சொல்வதையே கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் எத்தனை இடங்களை கேட்டு பெறுவார் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி உள்ளது.

    • மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
    • செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.

    மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.

    ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.

    ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

    மதுரை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

    • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
    • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

    நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

    ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

    எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×