search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Model Code of Conduct"

    • தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வென்று 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
    • வரும் 9-ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. வரும் 9-ம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது.
    • அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி மோடி நடத்தை விதியாக மாறிவிட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மோடி மற்றும் மற்ற பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகள் குறைந்த சாதி இந்துக்கள், சிறுபான்மையினர், மற்ற விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளில் உள்ள மக்களை மிரட்டுவதுபோன்று உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகின்றது.

    தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும். இருந்தபோதிலும், நாட்டு மக்களின் உரிமைகளை மீறும் ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

    2014-ல் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக கூறிய அவருடைய "Beti Banchao Beti Padao" என்ன ஆனது?.

    அன்னபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழை பெண்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதாக போலி வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். பா.ஜனதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கான சம்பளத்தை மூன்று வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. பா.ஜ.க.வும் அரிசிக்கு ஒரு பைசா கூட விடுவிக்கவில்லை, எங்கள் ஏழைகள் நெருக்கடியை உணரக்கூடாது என்பதற்காக முழுத் தொகையையும் நாங்கள் தோளில் சுமந்துள்ளோம்.

    பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தலித்கள் மற்றும் மற்ற சமூகத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி தலித்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளத்தை இழக்க சதி செய்கிறது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4 ஆம் தேதி வரை அமலில் உள்ளன.

    இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருப்பதால் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ×