search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naveen Jindal"

    • விமான பயணத்தின்போது ஆபாச படம் பார்க்க வலியுறுத்தல்.
    • மேலும், பிடித்து இழுத்து அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளார்.

    விமானத்தில் பயணம் செய்தபோது ஜிண்டால் குழுமத்தில் வேலை பார்க்கும் நிர்வாகி ஒருவர் தனக்கு ஆபாச படத்தை காண்பித்ததாகவும், தன்னை பிடித்து இழுத்ததாகவும் பெண் ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் நவீன் ஜிண்டால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவின் போஸ்டனுக்கு செல்வதற்கு பெண் ஒருவர் கொல்கத்தாவில் இருந்து அபு தாபி செல்லும் எதிகாட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். பின்னர் அபு தாபியில் இருந்து போஸ்டன் செல்ல வேண்டும்.

    அப்போது அருகில் ஒருவர் இருந்துள்ளார். அவருடன் உரையாடியபோது அவருடைய பெயர் தினேஷ் Kr சரயோகி என்றும், அவருக்கு ஏறக்குறைய 65 வயது இருக்கும். அவர் ஜிண்டால் குழும நிறுவத்தில் மூத்த நிர்வாகியாக வேலை பார்க்கிறார் என்பதும் தெரியவந்தது.

    பின்னர் நடந்தது குறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது:-

    அவர் ஓமனில் வசிப்பதாகவும், தொடர்ந்து பயணம் செய்வதாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அமெரிக்காவில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். உங்களுக்கு என்ன பிடிக்கும் என பேச்சை என்னை நோக்கி நகர்த்தினார்.

    நான் படங்கள் பார்க்க விரும்புகிறேனா என்று அவர் கேட்டார். நானும் விரும்புகிறேன் என்றேன். பின்னர் அவர் என்னிடம் அவருடைய செல்போனில் சில படப்பகுதிகள் (movie clips) உள்ளதாக தெரிவித்தார். அவர் எனக்கு ஆபாச பாடத்தை காண்பிக்க அவரது போனையும், இயர்போனையும் என்னிடம் திணித்தார்.

    அத்துடன் என்னை பிடிக்க தொடங்கினார். நான் அதிர்ச்சியாலும் பயத்தாலும் உறைந்து போனேன். இறுதியாக நான் வாஷ்ரூம் நோக்கி ஓடினேன். விமான பணியாளரிடம் புகார் அளித்தேன். எதிகாட் விமான நிறுவனத்தின் குழு மிகவும் விரைவாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அவர்களுடைய இருக்கை அருகில் என்னை உட்கார வைத்தனர். பழங்கள், டீ வழங்கினர்.

    நான் அவர் இருக்கையில் இருந்து சென்ற பிறகு, விமான பணிப்பெண்ணை அழைத்து நான் எங்கே சென்றேன் எனக் கேட்டுள்ளார். இதை அந்த விமான பணிப்பெண் என்னிடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அபுதாபி போலீஸ்க்கு ஏர்லைன் தகவல் தெரிவித்தர்து. அவர்கள் விமானம் தரையிறங்கும் இடத்தில் தயாராக நின்றனர். ஆனால் போஸ்டன் விமானத்தை தவர விட வாய்ப்புள்ளதால் புகார் அளிக்கவில்லை.

    அவர் என்னை பின்தொடர்ந்து வராத வகையில் அடுத்த நுழைவாயில் வரை பாதுகாப்புடன் செல்லப்பட்டேன். போலீசார் அவரிடம் கேள்வி கேட்கும்போது அவர் இதை மறுக்கவில்லை. நான் இதை ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், மற்றவர்களுக்கும் இதுபோன்ற நடக்க வாய்ப்புள்ளதால் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    மேலும் நவீன் ஜிண்டாலை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து "இந்த துஷ்பிரயோகம் செய்பவர் தனது பெண் ஊழியர்களை அதிகார இடத்தில் இருந்து எப்படி நடத்துவார் என்று எனக்கும் பயமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு நவீன் ஜிண்டால் "வெளியே வந்து பேசுவதற்கு நன்றி! நீங்கள் செய்ததைச் செய்வதற்கு நிறைய தைரியம் தேவை, மேலும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஒருபோதும் சகித்து கொள்ளமாட்டோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உடனடியாக விசாரித்து, அதன் பிறகு கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க எங்கள் அணியிடம் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன்" எனப் பதில் அளித்துள்ளார்.

    • பா.ஜனதா நேற்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் நவீன் ஜிண்டால் பெயர் இடம் பெற்றிருந்தது.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் உடனடியாக பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது.

    2024 மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டி.வி. தொடரில் ராமர் வேடத்தில் நடித்துள்ள அருண் கோவில் (Arun Govil), தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். பா.ஜனதாவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நவீன் ஜிண்டாலுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "உங்களுக்கு ராட்சத அளவிலான வாஷிங் மெஷின் தேவைப்படும்போது, இது (ஜிண்டால் பாஜக-வில் இணைந்தது) நிகழத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்கு ஒரு பங்களிப்பை கூட வழங்காத நிலையில், நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் எனச் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஜிண்டால் மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதா தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறப்பதில்லை என அடிக்கடி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

    நவீன் ஜிண்டால் இரண்டு முறை குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×