search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pinarai Vijayan"

    • தற்போது வரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும்.
    • 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இன்னும் 206 பேரை காணவில்லை.

    கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கடந்த 29-ந்தேதி இரவு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 30-ந்தேதியில் இருந்து மீட்புப்பணிகள் தொடங்கின. தற்போது வரை மாயமான மக்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "தற்போதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும். அவற்றில் 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேரை காணவில்லை. 81 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்படும். பாதுகாப்பான பகுதி கணடறியப்பட்டு நகர்ப்புறம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
    • நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் நையாண்டி கலைஞராக திகழ்ந்தவர் சுகுமாரன் பொட்டி. இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1996-ம் ஆண்டு, வாயில் வண்ணத்து கொத்தக்கு பாட்டு என்ற படைப்புக்காக கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

    உடல் நலக்குறைவு காரணமாக சுகுமார், காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    ×