search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "racing"

    • சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அஃலி' படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் அஜித்தின் பைக் பயணத்தால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று தாமதமான நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

    மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனோடு அஜித் இணைந்துள்ள 'குட் பேட் அஃலி' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையொட்டி சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

     

    இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது ஆரம்ப காலங்களில் கார் ரேஸராக இருந்தார்.

    திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றாலும் அவ்வப்போது ரேஸிங்கில் ஈடுபட்டு தனது ஆர்வத்துக்கு தீனி பிட்டுகொள்வது வழக்கம். படங்களில் இடம்பெறும் அஜித்தின் ரேஸிங் சாகச காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்

    எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
    • மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லை, மே.1-

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
    • 2,3 -ம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43-ம் ஆண்டு, நாராயணசாமி 10-ம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம் காணும் பொங்கல் விழாவில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு மாடு மற்றும் குதிரை எல்கை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து போட்டி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது.

    சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

    போட்டியில் வெற்றிப்பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் வெற்றிப்பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கும் பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

    பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். நிறைவாக பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

    அவனியாபுரம்

    மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு இன்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை இரட்டை மாட்டு வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 99 ரொக்கப் பரிசை அவனியாபுரம் மோகனசாமிகுமார் வண்டி பெற்றது.

    2-வது பரிசை தூத்துக்குடி விஜயகுமார் வண்டி ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 99-ஐ பெற்றது. 3-வது பரிசை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேப்பங்குளம் கண்ணன் மாட்டுவண்டி ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ஐ பரிசாக பெற்றது.

    சிறிய மாட்டு பிரிவில் முதல் பரிசு பெற்ற மாட்டு வண்டிக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ம், 2-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 99-ம், 3-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ. 75 ஆயிரத்து 99 ரூபாயும் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக நடந்த இந்த பந்தயத்தை திரளானோர் கண்டு களித்தனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெற்றிக் கோப்பை மற்றும் நாட்டு மாடு கன்றுக்குட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி பரிசாக வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், இலக்கிய அணி நேருபாண்டியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் வக்கீல் கலாநிதி, சசிக்குமார், ஆசைக்கண்ணன், பூமிநாதன், ராஜவேல் சரண்யா, பூங்கோதை மலைவீரன், ஒத்தக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×