search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ryan Ten Doeschate"

    • அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன்.
    • கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    டி20 உலகக்கோப்பை 2024 தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அவரது பயிற்சி காலமும் தொடங்குகிறது. அதே சமயம் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் மற்ற பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த கேள்வியானது எழுப்பட்டது.

    அந்த கேள்விக்கு கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இலங்கை தொடர் உதவி ஊழியர்களின் முக்கிய அம்சமாக இருக்கும். நான் சொன்னது போல், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு அணியின் கூடுதல் பயிற்சியாளர் குறித்து முயற்சி செய்து முடிப்போம்.

    ஆனால், அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் இதில் கைதேர்ந்த வல்லுநர்கள். ரியான் மற்றும் அபிஷேக் வெற்றிகரமான நிலைப்பாட்டை பெற முடியும் என்று நம்புகிறேன். பயிற்சியாளர்களாக நாங்கள் வெற்றிகரமான பதவிக் காலத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்.

     

    பிசிசிஐ குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் எனது பெரும்பாலான கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். ஆனால் எனது பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்ததாக செய்திகள் வெளிவந்தது. இதை எல்லாம் படிக்கும் போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

    அபிஷேக், உதவி பயிற்சியாளராக, ரியான், துணை பயிற்சியாளராக பணியாற்றுகின்றனர். உதவி பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை விட மூன்று துறைகளிலும் கவனம் செலுத்த முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

    அதனால்தான் இப்போது இந்த இந்திய அணியில் இரண்டு உதவிப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் நாங்கள் எதிர்கொள்ள உள்ளோம். மேலும் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சரியான துணைப் பணியாளரை நாங்கள் தேர்வு செய்வோம்.

    என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
    • அதை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

    இதனையடுத்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. அவர் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். இதனை தொடர்ந்து பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் பந்து வீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் பரிசீலனையில் உள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் கவுதம் கம்பீர் வினய் குமாரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    இந்நிலையில் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட்டை நியமிக்க பிசிசிஐ-யை வலியுறுத்தி உள்ளார். அவர் முன்னாள் நெதர்லாந்து அணியின் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரும் ஆவார்.

    இது அனைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், கம்பீரின் உதவியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தவர்கள் அப்படியே இந்திய அணியில் இணைவார்கள்.

    ×