search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Corporation woman officer"

    சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தார் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநயாக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மோகன். ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ரங்கநாயகி (56) சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    ரங்கநாயகி சங்ககிரியில் உள்ள தனது தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு தனது மகன் சசிதரன் (28) மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மகன் மற்றும் கணவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    அதில் என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருவதால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம் என்று சசிதரன் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரங்கநாயகியின் குலதெய்வ கோவில் மைசூரில் இருப்பதால் அவர் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் ஒரு தனிப்படை போலீசார் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் தேடினர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இதற்கிடையே ரங்கநாயகியின் மகன் சசிதரன் உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில், எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எனது நண்பர்கள், உறவினர்கள் என்னடா இப்படி பண்ணிட்டியே என்று நினைப்பவர்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் தான் இப்படி பண்ணினேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். வீட்டு ஓனர்ஸ், பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோருக்கும் ரெம்ப சிரமம் கொடுத்து விட்டோம்.

    அவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கத்தியதால் மானம், மரியாதை போய் விட்டது. அவங்க வீட்டிற்குள் நிறைய பிர்ச்சனை வந்து விட்டது. எங்களால் இனி மேல் இது போல நடக்காது. அதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஓசூரில் எங்க வீட்டு ஓனருக்கு மிகவும் சிரமமாக தான் இருக்கும். உங்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். முடிந்த வரை நார்மலாக இருக்க நண்பர்கள் உதவி செய்யுங்கள். எவ்வளவு சந்தோ‌ஷமாக இருக்க ஆசைப்பட்டோமோ அது எல்லாம் முடிஞ்சுடுச்சி.

    இந்த ஒரு பெண்ணால, அந்த ஒரு குடும்பத்தால எங்கள் குடும்பம் முடுஞ்சிடுச்சி. இவ்வளவு அசிங்க, அசிங்கமாக பேசியதற்கு அப்புறம் உயிர் வாழ்வதை விட நாங்கள் போய் விடலாம், அதனால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க என்று கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார். இதனால் அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளதால் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் மாதேஸ்வரன் மலை பகுதியில் சென்ற போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் மாதேஸ்வரன் மலை, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான ஒரு தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இன்று காலை வரை கிடைக்கவில்லை. மேலும் ரங்கநாயகியின் உறவினர்கள் மாயமான 3 பேரும் எங்கு உள்ளனர் என்பதை கண்டறிய ஜோதிடரை நாடியுள்ளனர்.

    இதனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதில் தற்போது வரை மர்மமாக உள்ளது. மேலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தற்கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து தேடி வரும் போலீசார் இன்று மாலைக்குள் இந்த விவகாரத்திற்கு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். #Tamilnews
    மனைவி கொடுமையால் தற்கொலை செய்யப்போகிறோம் என்று குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரியின் மகன் வாட்ஸ்அப்பில் உருக்கமாக பேசியுள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி ரங்கநாயகியின் மகன் சசிதரன் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் உருக்கமாக பேசியதாவது:-

    இன்னொரு வி‌ஷயம் நான் சொல்ல விரும்புகிறேன். எங்களை இப்படி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து ஆளாக்கின என்னுடைய மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் காவல்துறை ஆணையாளருக்கு கேட்டுக்கொள்கிறேன்.

    என் நண்பர்கள், உறவினர்கள், என்னடா இப்படி பண்ணி விட்டாயே என நினைக்கிறவங்களுக்கு வேறு வழியில்ல. அதனால் தான் நான் இப்படி பண்ணினேன். எங்க 3 பேராலையும் வழக்குப் போட்டு கொண்டு இருக்கவும் முடியாது. அதனால் தான் நாங்க இந்த முடிவு எடுத்தோம். எல்லொருமே எங்களை மன்னிச்சுடுங்க..

    நான் ஓசூரில் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர், பக்கத்தில இருக்கிறவங்க எல்லோருக்குமே நாங்க ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம். வீட்டின் முன்பு வந்து மனைவி குடும்பத்தினர் கத்துனதுல எல்லோருடைய மானம், மரியாதை போச்சு. அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனை வந்திருச்சு. இனிமேல இந்த மாதிரி நடக்காது எங்களால... இதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஒசூரில் எங்க வீட்டின் உரிமையாளருக்கும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆகவே அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். முடிந்த அளவுக்கு கொஞ்சம் எல்லாம் நர்மல் ஆவதற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி பண்ணுங்க. நான் போனதற்கு அப்புறம்.

    மற்றபடி வேறு ஒன்னும் மில்ல. ஐ மிஸ் யூ லார்டு. எவ்வளவு சந்தோசமாக இருக்கனும் ஆசைப்பட்டமோ எல்லாமோ முடிஞ்சு. அந்த ஒரு பெண்ணுனால. அந்த ஒரு குடும்பத்தினால. எங்க குடும்பம் முடிஞ்சு.

    இவ்வளவு அசிங்க, அசிங்கமா அவர்கள் பேசி அதுக்க அப்புறம் வந்து உயிர் வாழ்வதை விட போயிடலாம். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க...

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    அவர் பேசும்போது, கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதனால் வாட்ஸ்-அப்பில் பேசியபடி பெண் அதிகாரி குடும்பத்தினர் ஏதும் தவறான முடிவு எடுத்தார்களா? அல்லது எங்கிருக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது.

    இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குடும்பத்துடன் மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்த மோகன். இவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரங்கநாயகி(வயது 56). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    மோகன்-ரங்கநாயகி தம்பதிக்கு சசிதரன்(28) என்ற மகன் உள்ளார். சசிதரனின் மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். சசிதரன் தனது குடும்பத்துடன் ஓசூரில் தங்கி, அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிதரன் தனது மனைவி, குழந்தையுடன் சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது பிரேமாவுக்கும், சசிதரன் மற்றும் அவரது தாயார் ரங்கநாயகிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரேமாவின் பெற்றோர் ரங்கநாயகியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ரங்கநாயகி தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து சங்ககிரியில் உள்ள ரங்கநாயகியின் தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு ‘வாட்ஸ் அப்’பில் ஒரு தகவல் அனுப்பி உள்ளனர். அதில் பேசிய சசிதரன், என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம். எங்களை டார்ச்சர் செய்து வரும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    இந்த மெசேஜை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரங்கநாயகி வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு ரங்கநாயகி உள்பட 3 பேரும் காணவில்லை. மாறாக அவர் எழுதியிருந்த ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் எனது மகன், கணவருடன் தற்கொலை செய்ய போகிறோம் என எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி மற்றும் அவரது கணவர், மகன் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மைசூருக்கு விரைந்துள்ளனர்.

    இதற்கிடையே உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருப்பதாக மற்றொரு தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஒகேனக்கல்லுக்கும் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சசிதரனின் மனைவி பிரேமா மற்றும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×