search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shah Rukh"

    • பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஷாருக் கான் மட்டுமின்றி மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம்பிடித்துள்ளார். 2024 ஹூருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள நடிகர் ஷாருக் கானின் சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி ஆகும்.

    திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மட்டுமின்றி பாலிவுட் துறையை சேர்ந்த மேலும் சிலரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பட்டியல் பின்வருமாறு..

    ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி

    ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 ஆயிரத்து 600 கோடி

    ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி

    அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,600 கோடி

    கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,400 கோடி 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
    • எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    மும்பை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:

    ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.

    அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.
    • கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

    டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

    கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×