search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sixes"

    • 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
    • 2024 ஆம் ஆண்டில் இதுவரை நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.

    2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பூரன் 139 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

    ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ் கெயில் மட்டுமே 6 இடங்களை பிடித்துள்ளார்.

    வீரர் 

    சிக்ஸர்கள் 

    ஆண்டு

    நிக்கோலஸ் பூரன்

    139* 

    2024

    கிறிஸ் கெயில்

    135 

    2015

    கிறிஸ் கெயில்

    121 

    2012

    கிறிஸ் கெயில்

    116 

    2011

    கிறிஸ் கெயில்

    112 

    2016

    கிறிஸ் கெயில்

    101 

    2017

    ஆண்ட்ரே ரஸ்ஸல்

    101 

    2019

    கிறிஸ் கெயில்

    100 

    2013

    க்ளென் பிலிப்ஸ்

    97 

    2021

    கீரன் பொல்லார்ட்

    96 

    2019

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் டோனி பல சாதனைகளை படைத்துள்ளார். முதலாவதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டோனி 9 முறையும் ரோகித் 8 முறையும் ரிஷப் பண்ட் 6 முறையும் அடித்துள்ளனர்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதை தவிர ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20-வது ஓவர்களில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் விரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் பொல்லார்ட் 2-வது இடத்தில் உள்ளார்.

    • நேற்றைய போட்டியில் டோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.
    • ஆட்டத்தின் கடைசி ஓவரில் டோனி 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் 2 ஆட்டத்தில் டோனி களம் இறங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் விசாகப்பட்டினத்தில் சி.எஸ்.கே. மோதிய நேற்றைய 3-வது போட்டியில் டோனி களம் இறங்கி தனது அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சி.எஸ்.கே. தோற்றாலும் டோனியின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

    23 பந்தில் 72 ரன் தேவை என்ற கடினமான நிலையில் இருந்த போதுதான் டோனி 8-வது வீரராக களம் வந்தார். முகேஷ்குமார் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கேட்சில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் கலீல் அகமதுவின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    3 சிக்சர்கள் மூலம் டோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். டோனி 242 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டோனியை கோலி முந்தினார். தற்போது அவரை டோனி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலியோ முதல் வரிசையில் ஆடுகிறார். ஆனால் டோனி களத்தில் இறங்கும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது.

    கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. #ENGvWI
    செயின்ட் ஜார்ஜ்:

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். கேப்டன் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

    பின்னர் 419 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ENGvWI
    ×