search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden road blockade"

    • கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் விழா நிறைவடைந்தது.

    ஆனால் அடுத்த நாள் ஞாயிற்று க்கிழமை விடு முறை என்பதால் அன்று கட்டு க்கடங்காத கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழ மையும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் குருநாத சாமி கோவில் வளாகத்தில் போலீசார் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடி யாது கடைகளை அடைக்கு மாறு கூறியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் அந்தியூர் இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்து க்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கடை நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் கடந்த 2 நாட்களா க மழை யின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியா பாரம் இல்லை. குறைந்து காணப்பட்டது. நாளை (புதன்கிழமை) பால் பூஜை நடக்கிறது.

    எனவே நாளை வரை கடை நடத்த எங்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுதந்திர தின விடுமுறையை யொட்டி எதிர்பார்த்த கூட்டம் வரு வதற்கு வாய்ப்பு இருப்பதால் நாளை வரை அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் ஏ.ஜி. வெங்க டாசலம் எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று புதன்கிழ மை வரை கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலந்து சென்றனர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

    • 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா மடுவு வரை சாலை விரி வாக்கம் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது.

    இந்த நிலையில் அண்ணா மடுவில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வாகனங்கள் திரும்பிச் செல்ல பொதுமக்கள் நடந்து செல்ல பாதைவிடப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது. இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளதால் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தான் திரும்பி வந்து அவர்கள் இல்லத்திற்கு வர வேண்டி உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் தனியார் திருமண மண்டபம் முக்கிய வங்கிகள் செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பாக அந்தந்த இடங்களில் செல்வதற்கு சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    என்று அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை அந்தியூர் பஸ்நிலையம் அருகே உள்ள பவானி-அம்மாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து இதற்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அவர்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    • சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை–த்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது.
    • அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை–த்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி தோண்ட இரு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 15 நாட்களாக பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர்.இந்த சாலைமறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை
    • கோவை- பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குனியமுத்தூர்:

    கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் உள்ளது சமத்துவ நகர். இந்த நகரில் 625-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் மனு கொடுத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை குடியிருப்பு சங்க தலைவர் அசன், துணைதலைவர் மிளகாய் நூர், செயலாளர் செல்வம், பொருளாளர்கள், ஹனீபா, சேட் ஆகியோர் தலைமையில் சமத்துவ நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள சுகுணாபுரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் மதுக்கரை போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் போராட்டத்தி ல் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து 20 நாட்கள் ஆகிறது. இன்னும் தண்ணீர் வரவி ல்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சாலை வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. எனவே எங்களுக்கு தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தர வேண்டும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என தெரிவித்தனர். அதுவரை மறியலை கைவிடமாட்டோம் என்றனர்.இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வர சொல்கிறோம். நீங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒரமாக வாருங்கள் என அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×