search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspects"

    • அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர்.
    • கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

    அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர். பார்மொடன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இன்று (மே 24) காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    36 வயதுடைய ஆணும் 44 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் மார்பில் சுடப்பட்டுள்ளனர். மற்றொருவர் கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


     



     

    கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். குற்றவாளிகள் இருவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

     

    • விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் தீ வைப்பு மற்றும் வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மொத்தம் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குற்றவாளிகளை கண்டறிய நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தெரிவித்துள்ளார்.

    ஜேடர்பாளையம் போலீஸ் நிலையம் 9498101050, நாமக்கல் கட்டுப்பாட்டு அறை 9498181216, 04286280007, நாமக்கல் தனிப்பிரிவு அலுவலகம் 9498101020, நாமக்கல் எஸ்.பி., அலுவலகம் 9498181340, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., அலுவலகம் 8300014434, 9498101023, பரமத்தி இன்ஸ்பெக்டர் 9443522993, ஜேடர் பாளையம் தனிப்பிரிவு போலீசார் 9498123154. மேற் கொண்ட தொலைபேசி எண்ணுக்கு சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்கள் தகவல் தரலாம். மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித் துள்ளனர். மேலும் கிராம பகுதிகளில் தொலைபேசி எண்களை நோட்டீஸ் அச்சடித்து விநியோகத்து வருகின்றனர்.

    • மர்மநபர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சோமனூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் சண்முகம். விசைதறி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45).

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.

    மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

    அவர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவரது முடியை பிடித்து மர்மநபர்கள் இழுத்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

    மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கணவன் -மனைவி இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சியில் அவரின் முடியை பிடித்து கீழே தள்ளிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ். ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டிணம், செம்பனார்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவர் கடந்த மாதம் 25-ந்தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சார்லஸ், மணிகண்டன் முகேஷ் சிலம்பரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக பாரதி, கீர்த்திகரன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    வந்து செல்லும்போது நீதிமன்றத்தின் வெளியில் காத்திருந்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×