என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.
- அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார்.
விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும். வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால் வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும். தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க வேண்டும். அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப வேண்டும். விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். இதற்காக புராணங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.
தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும், தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
- சிறப்புகள் பல கொண்ட விநாயக விரதத்தை விநாயக சுக்கிர வார விரதம் என்றும் சொல்வார்கள்.
- சுக்கிரனின் ஆதிக்கம் உடைய வெள்ளிக்கிழமையில் இந்த சக்தி வாய்ந்த விரதத்தை செய்து வர வேண்டும்.
சிவபெருமானின் மூத்த மகன் என்றும் பார்வதி தேவியின் அன்புப் புதல்வன் என்றும் போற்றப்படுகிற விநாயகப் பெருமானை வழிபட்டால் அல்லல் போகும். வல்வினைகள் போகும் - அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையாகிய பிறவிப் பிணி போகும் என்று வாயாரப்பாடி விளக்கி இருக்கிறார் அவ்வைப் பிராட்டி.
விநாயகர் பெருமான் சனாதன தர்மக் கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.
ஆனால் இவை சில நியதிகளுக்கு உட்பட்டு வருவதால் எடுத்துச் சொன்னால் தான் செய்பவர்களுக்குப் புரிகிறது. சிறப்புகள் பல கொண்ட விநாயக விரதத்தை விநாயக சுக்கிர வார விரதம் என்றும் சொல்வார்கள்.
தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத நியமிங்களில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.
விநாயக விரதத்தைத் தொடங்கி, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும். அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.
ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்களும் கடைப்பிடித்த இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.
எனவே, சுக்கில சதுர்த்தி எனப்படும் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், ஜோதிட விதியில் நான்காவது ஸ்தானம் என்பதற்குச் சுகங்களைக் குறிக்கும் இடம் என்று பெயர்.
எனவே நான்காவது திதியாகிய சதுர்த்தியில் தொடங்கி சுக்கிரனின் ஆதிக்கம் உடைய வெள்ளிக்கிழமையில் இந்த சக்தி வாய்ந்த விரதத்தை செய்து வர வேண்டும்.
- சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமரத்தில் இவர் இயற்கையாகவே தோன்றி அருள் பாலித்து வருகிறார்.
- நாளடைவில் “ஆலமர இயற்கை விநாயகர்’’ என்ற பெயர் உருவானது.
வேழ முகத்து விநாயகனைத் தொழு, வாழ்வு மிகுந்து வரும்- என்று அவ்வையார் பாடி இருக்கிறார். விநாயகர் மிகவும் வித்தியாசமான கடவுள். இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் விநாயகருக்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் என்ற தனித்துவம் இவருக்கு உரியது.
இவருக்கு மேல் இறைவன் இல்லை என்பார்கள். அதனால்தான் எந்த வழிபாட்டை தொடங்கினாலும் முதல் வணக்கம் விநாயகருக்கு செலுத்துகிறோம். இவரை அமைப்பதற்கும் வணங்குவதற்கும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.
அரச மரம், ஆலமரம், ஆற்றங்கரை, முச்சந்தி என்று எங்கு வேண்டுமானாலும் இவர் இருப்பார். அதுபோல விநாயகரை போற்றி வழிபட நம் முன்னோர்கள் 32 வகை விநாயக மூர்த்தங்களை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான பெயர்களில் விநாயகர் வீற்றிருந்து அருள் புரிந்து வருகிறார்.
இத்தகைய சிறப்பு உலகில் எந்த கடவுளுக்குமே இல்லை. நவீன மாற்றங்களுக்கு ஏற்ப கூட விநாயகரது பெயருக்கு முன்பு புதிய அடைமொழிகள் சேர்ந்துள்ளன. கிரிக்கெட் விநாயகர், இண்டர்நெட் விநாயகர் எல்லாம் வந்து விட்டார்கள். அந்த வரிசையில் சென்னையில் தனித்துவம் கொண்ட ஒரு விநாயகர் இருக்கிறார்.
அவர் பெயர் ஆலமர இயற்கை விநாயகர். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமரத்தில் இவர் இயற்கையாகவே தோன்றி அருள் பாலித்து வருகிறார். அதனால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. சென்னையில் சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விபர கணக்கெடுப்புப்படி சென்னை மற்றும் புறநகர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் ஆலயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மயிலாப்பூரில் அதிகபட்சமாக 12 விநாயகர் கோவில்கள் இருக்கின்றன. இந்த விநாயகர் ஆலயங்களில் பெரும்பாலானவை பழமை சிறப்பு வாய்ந்தவை. நங்கநல்லூரில் உள்ள விநாயகர் ஆலயம் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது.
என்றாலும் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் அதிக அளவில் பக்தர்களையும் வி.ஐ.பி.க்களையும் தன்னகத்தே ஈர்த்து அருள்பாலித்து வருகிறார். இவர் ஆலமரத்தில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டதை ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் இந்த ஆலயம் உள்ள பகுதியில் முன்பு ஒரு சிவாலயம் இருந்தது.
அந்த சிவனை வழிபட சென்ற பத்மநாபன் என்ற பக்தர் சற்று இளைப்பாறுவதற்காக அருகில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் படுத்தார். சிறிது நேரம் கழித்து சிறிது திரும்பி படுத்தவர், ஆலமரத்தின் வேர் பகுதியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த வேர் பகுதி அச்சு அசல் விநாயகர் போலவே காட்சியளித்தது. உடனே மற்ற பக்தர்களை அழைத்து வந்து காண்பித்தார்.
ஆலமர வேரில் விநாயகரே வந்து அமர்ந்து இருப்பது போன்ற கோலத்தை கண்டதும் எல்லோரும் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பித்து விட்டனர். மறுநாளே அந்த ஆலமர வேர் விநாயகருக்கு தடபுடலாக பூஜைகள் நடந்தது. இதுபற்றி அறிந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆலமர வேர் விநாயகரை வணங்கிச் சென்றனர்.
எல்லோரது வாயிலும் ஆலமர விநாயகர் என்று பேசப்பட்டது. நாளடைவில் "ஆலமர இயற்கை விநாயகர்'' என்ற பெயர் உருவானது. இந்த விநாயகர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாள் 1968-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி.
எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 14-ந்தேதி ஆலமர இயற்கை விநாயகர் ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் பச்சையம்மன் ஆலய உபகோவிலாக இருக்கிறது. காலை 7 மணிக்கு இந்த ஆலயம் திறக்கப்படும்.
7.30 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் நடந்து பூஜை செய்யப்படும். மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இவரை வழிபடலாம். இந்த ஆல மர இயற்கை விநாயகர் மிகுந்த சக்தி படைத்தவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் பரவியுள்ளது. அதற்கு ஒரு காரணம் உள்ளது. பொதுவாக தல விருட்சங்களுக்கு தனி ஜீவன் உண்டு.
எனவேதான் தல விருட்சங்களை கடவுள் மூர்த்தங்களுக்கு இணையாக கருதி, சுற்றி வந்து வழிபடுவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். அத்தகைய தல விருட்சத்தின் வேரிலேயே விநாயகர் தன்னை வெளிப்படுத்தி இருப்பதால், இந்த ஆலமர இயற்கை விநாயகருக்கு இரட்டிப்பு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால்தான் அரசினர் தோட்டத்து விநாயகரை சில அரசியல் பிரமுகர்கள் எந்த காரியம் தொடங்கினாலும், முதலில் வந்து வணங்கி செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். கற்பக விருட்சங்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது கேட்ட வரத்தை தரும் ஆற்றல் கற்பக விருட்சங்களுக்கு இருக்கிறது.
எனவே ஆலமர இயற்கை விநாயகரும், கேட்ட வரத்தை உடனே தருபவர் என்று பெயர் பெற்றுள்ளார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இந்த ஆலமர விநாயகரை வழிபட மிகவும் உகந்த நாட்களாகும். மேலும் இவருக்கு என்று ஒரு தனி சிறப்பான வழிபாடு இருக்கிறது. அது நாட்டு சர்க்கரையை படைத்து வழிபடும் வழிபாடாகும்.
உங்களால் முடிந்த அளவு நாட்டு சர்க்கரையை வாங்கி 11 வாரங்கள் ஆலமர இயற்கை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். பதினோராவது வாரம் சிதறு தேங்காய் அடித்து வழிபட்டால், நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
நிறைய பேர் நாட்டு சர்க்கரை படைத்து ஆலமர இயற்கை விநாயகர் கருணையால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி கொண்டுள்ளனர். சில பக்தர்களின் கனவில் இந்த விநாயகர் தோன்றி தன் ஆலயத்துக்கு வரவழைத்து அருள் பாலித்த அற்புதங்களும் நடந்துள்ளன.
இந்த அற்புதங்களை அறிந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆலயத் திருப்பணிக்கு ரூ.20 லட்சம் வழங்கினார். அதன் மூலம் இந்த ஆலயத்தில் சிவன்-வள்ளி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், தெட்சிணா மூர்த்தி, துர்க்கை, பெருமாள்-மகாலட்சுமி, சுதர்சனர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், அன்னபூரணி, சரஸ்வதி மற்றும் நவக் கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டன.
அதன்பின்னர் இந்த ஆலயத்துக்கு மிக விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சமீப காலமாக ஆலமர விநாயகருக்கு நாட்டு சர்க்கரை படைக்கும் பிரார்த்தனை பிரபலமாகி வருகிறது. இந்த ஆலயத்தை நாடி வந்து விநாயகர் அருளைப் பெற்றுச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப இந்த ஆலயம் சிறிய ஆலயமாக இருந்தாலும் கேட்ட வரம் தரும் விநாயகர் ஆலயம் என்ற மகிமையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே.
- பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. பெருமாள் பணக்காரர் தான்! ஆனாலும், எளிமையை விரும்புகிறார் கவனித்தீர்களா?
வைணவ சம்ரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அந்த அரிசியை மறுநாள் ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து, மலை போன்ற அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி செய்து "கோவிந்தா" என்ற நாமம் முழங்க மாவிளக்கேற்றுவது வழக்கம்.
நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலையிலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு.
கன்னி மாதத்தில் (புரட்டாசி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினத்தில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.
புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
எமபயம் நீக்க வழிபாடு
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக்கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன், மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும் தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன் கோவில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
கன்னி ராசியில் சூரியன் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன். அந்த புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார். ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.
புதனுக்கு வெகு நட்பு கிரகம் என்பது சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில் சூரியன் வந்து விழும் காலம் புரட்டாசி மாதம். எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் தமிழில் புரட்டாசி என்றும், ஸெளரமானத்தில் கன்யாமாஸமென்றும், சாந்த்ரமானத்தில் பாத்ரபதமென்றும் இப்புரட்டாசியைச் சொல்வார்கள்.
புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன்மேல் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன் லீலாவிபூதியில் பாரததேசத்தில் ஆதிசேஷனை மலையாக ஆகும்படிச் செய்து அதன்மேல் நின்ற திருக்கோலமாகக் காட்சியளிக்கின்றான். திருமலையில், ஏன் நிற்கிறான் என்றால் திருவடி முதல் திருமுடி வரை நாராயணனைப் பார்த்தால் மகாபாவங்கள் யாவும் விலகுகின்றன. சிறிய பாபங்கள் விலகிப் போகுமென்று சொல்ல வேண்டுமா? ஆகையால்தான் திருவடி முதல் திருமுடி வரை பக்தர்கள் வணங்கிடும் விதத்தில் அழகாக நிற்கின்றார். அப்படிப்பட்ட திருவேங்கடவனின் அவதாரமாதம் புரட்டாசியாகும். மேலும் அவருடைய அபராவதாரமான ஸ்வாமி தேசிகனும் அவருடைய அபராவதாரமான ஸ்ரீஆதி வண்சடகோப மஹா தேசிகனும் அவதாரமான மாதம் புரட்டாசியே ஆகும். ஆகையால் அவர்களுடைய திருநட்சத்திர மஹோத்சவங்கள் இந்த மாதம் பூராவும் நடைபெறுவதால் மற்ற எதுவும் செய்ய வழியில்லை. அதனால் புரட்டாசி உயர்ந்தது.
மார்கழி மாதம் பூராவும் பகவானை ஆராதிக்கும் நாள்தான். ஆனால் இரண்டு அம்சங்கள் புரட்டாசிக்கு அதிகமாக உண்டு. தேவதா ஆராதனத்துடன் பித்ருக்கள் ஆராதனமும் இம்மாதம் செய்யப்படுகிறது. பித்ருக்கனை ஆராதிக்கும் மஹாளயம் ஒன்று, பெண்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தரும் நவராத்திரி உத்சவமும், ஆக இரண்டு. ஆகையால் புரட்டாசி பெருமை பெறுகிறது. பகவானையும், பித்ருக்களையும், ஆசார்யர்களையும், பெண் கடவுளரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி இவர்களையும் ஆராதிப்பதால் தன்னிகரில்லாத் தனித்தன்மை பெறுகிறது புரட்டாசி.
கன்னிகா மாதந்தன்னில் கனத்ததோர் சனி வாரத்தில்
இந்நிலம் தன்னில் உள்ளோர் யாவரும் உம்மை நோக்கி
உன்னிதமாகவேதான் ஒருபொழுது இருந்தவோர்க்கு
முன்னுள்ள பாவம் தீர்ப்பாய் முகுந்தனே போற்றி போற்றி.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1வது, 5வது சனிக்கிழமையில் போடுவாங்க. பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
தளியல் படையல்கள் :
உப்பு போடாத சாதத்தில் வெல்லம், தயிர் சேர்த்த சாதம், பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் தேங்காய் சாதம், காராமணி சுண்டல், உருளை வறுவல், பாசிப்பருப்பு பாயாசம், முருங்கைக் கீரை பிரட்டல், கொள்ளு வடை, அப்பளம், சாம்பார்.
- விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும்.
- வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள்.
விநாயகர் பெருமான் சனாதன தர்மக் கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.
விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.
வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப் பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப் பிடிக்க வேண்டும்.
- சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது.
- மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
"புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.
சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5-வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8-வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12-வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2-வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர். இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.
இத் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. இத்தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம். இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.
சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கருப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றிச், அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றய விரதங்களின் போது எண்ணெய் வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணெய் வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப்பெறுகின்றது. காரணம்;
நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.
இத்தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணைய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
இந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் ஜோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கருப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனி காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
சனீஸ்வரன் தோத்திரம்:
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !
நவகிரக தோத்திரம்:
ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி
ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி
ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி
ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
ஓம் பொற்ப்ட் டுடையி பொழிவாய் போற்றி
ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி
ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி
ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி
ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி
ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி
ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி
ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி
ஓம் முத்துவிமான வாகனா போற்றி
ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி
ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி
ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி
ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி
ஓம் பூதேவி குமரா பௌமா போற்றி
ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி
ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி
ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி
ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி
ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி
ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி
ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி
ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி
ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி
ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி
ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி
ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி
ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி
ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி
ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி
ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி
ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி
ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி
ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி
ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி
ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி
ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி
ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி
ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி
ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி
ஓம் இராஜபோகம் தரு இராகுவே போற்றி
ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி
ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி
ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி
ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி
ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி
ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி
ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுஷ்டிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுஷ்டிக்க வேண்டும்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.
"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. "
"உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே."
"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."
- சுந்தரமூர்த்தி சுவாமிகளால் 7-ம் திருமறையில் 'பதிகம்' பாடப்பெற்ற ஸ்தலம்.
- ஒரு காரியத்தை வேண்டிக் கொண்டு விநாயகரின் காதில் பூக்களை வைத்து விட்டு வலம் வந்து வழிபட்டால் காரியம் கைகூடும்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான ஆலயங்களுள் ஒன்றாகும்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமறையில் 'நிறைவன் திங்கள்' என்று தொடங்கும் திருப்பாட்டில், வைப்புத்தலமாக 'திருச்சிற்றேமம்' என குறிப்பிடப்படுகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் 7-ம் திருமறையில் 'பதிகம்' பாடப்பெற்ற ஸ்தலம்.
இக்கோவிலில் மதுரை சவுண்ட கோப்பா கேசவர்மன், ராஜகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி, ராஜராஜதேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், மற்றும் விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பதற்கு இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களே சான்று.
இந்து சமயத்தின் இறை வழிபாட்டில் மூக்கண் முதல்வனாய், மூலப் பரம்பொருளாய் இருப்பதும் முதலாவதாய் நாம் வழிபடுவதும் விநாயகர் ஆகும்.
இத்தலத்தில் உள்ள 'பூ விழுங்கி விநாயகர்' தனிச்சிறப்பு உடையவர். ஒரு காரியத்தை வேண்டிக் கொண்டு விநாயகரின் காதில் பூக்களை வைத்து விட்டு வலம் வந்து வழிபட்டால் காரியம் கைகூடும். பக்தர்கள் பலரும் உணர்ந்த உண்மை அனுபவம் இது.
பெரியநாயகி அம்பாள் சன்னதியின் வலதுபுறம் சிறு பிள்ளையார் (விநாயகர்) இருக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி பெரிது.
இந்த விநாயகரை மனதில் நிறுத்தி அவரிடம் பிரார்த்தனை செய்து தங்களின் வேண்டுகோளை மனதில் நினைத்து விநாயகரின் இரு காதுகளிலும் ஒவ்வொரு நந்தியா விடை (நந்தியா வட்டை) மலரை காம்பை கிள்ளி விட்டு வைத்து விட வேண்டும்.
பக்தர்கள் நினைத்த காரியம் உடன் நடக்குமென்றால் பூ வைத்த உடனேயே உள்ளே சென்று விடும். பூ தாமதமாக செல்லுமென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது. பக்தர்கள் அனுபவத்தால், கண்ட உண்மை இது.
ஆண்டவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. ஆனால் உண்மை. பூவை விழுங்கி பக்தர்களுக்கு இவர் நல்வழி காட்டுவதால் பக்தர்கள் இவரை பூ விழுங்கி விநாயகர் என செல்லமாக குறிப்பிடுகின்றனர்.
- விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.
- வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.
நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.
முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் விரதம் இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தால் விரதமிருந்து விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடலாம். அல்லது நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி.
- தனக்கு ஏற்பட்ட நோய் நீங்கியதின் காரணமாக 12 வேலி நிலத்தை திருநீலகண்ட பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்தார் மகாராஜா.
- முடப்புள்ளிக்காடு ஏந்தல் என்று அழைக்கப்படும் மையப்பகுதியில் திருநீலகண்ட பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டது.
தஞ்சைத் தரணியை அரசாண்ட துளசி மகாராஜாவிற்கு ஒரு சமயம் நீரிழிவு நோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற எண்ணி திருப்பெருந்துறை (மணிவாசகர் திருத்தலமான ஆவுடையார்கோவில்) செல்லும் வழியில் தனது அரச பரிவாரங்களுடன் பேராவூரணிக்கு வந்தார்.
அப்போது சங்கரர்கள் 2 பேர் பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்த துளசி மகாராஜா, 'தனக்கு தீராத வியாதி இருக்கிறது' 'அதை தீர்க்க திருநீறு கொடுங்கள்' எனக்கேட்டார். அவர்களும் பிள்ளையாரை வணங்கி மகாராஜாவிற்கு திருநீறு கொடுத்தார்கள். என்னஆச்சரியம்! திருநீறு பூசிய நேரத்திலேயே மகாராஜாவின் தீராத வியாதி குணமாகியது.
தனக்கு ஏற்பட்ட நோய் நீங்கியதின் காரணமாக 12 வேலி நிலத்தை திருநீலகண்ட பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்தார் மகாராஜா. பின்னர் ஒருநாள் பிள்ளையார் மகாராஜா கனவில் தோன்றி, தனக்கு பழத்தோட்டம் வேண்டுமென கேட்டதாகவும் அதனால் பழத்தோட்டமும், மலர்த்தோட்டமும் பேராவூரணியில் உள்ள நல்லமான் கொல்லையில் 4 வேலி இடத்தை எழுதிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னரே, பேராவூரணி நகரின் முடப்புள்ளிக்காடு ஏந்தல் என்று அழைக்கப்படும் மையப்பகுதியில் திருநீலகண்ட பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டது.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
- விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.
விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.
விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.
- இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது.
- சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர்.
சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
"புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்.
சனீஸ்வரன்; கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் "பஞ்சம சனி" என்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் "அட்டமத்துச் சனி" என்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (இவ்மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றமையால்) "ஏழரைச் சனி" என்று அழைப்பர்.
சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் புரட்டாதி மாத முதல் சனிக்கிழமை சனீஸ்வரர் பிறந்தவர். இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. 12 இராசியையும் கடக்க 30 வருடங்கள் ஆகின்றன. ஆகவே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. அதனால் போலும் 30 வருடங்களுக்கு மேல் கஷ்டமாக வாழ்ந்தவர்களும் இல்லை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இல்லை என்ற முதுமொழி பிறந்தது.
வாழ்க்கையில் முதலில் வரும் ஏழரைச் சனி காலத்தை "மங்கு சனி" என்றும், இரண்டாவதாக வருவதை "பொங்கு சனி" என்றும், மூன்றாவதாக வருவதை "மரணச் சனி" என்றும் அழைப்பர். இக்காலங்களில் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றைய கிரகங்களின் நிலைகளைப் பொருத்து பலங்கள் கிடைக்கும் என்கின்றது ஜோதிடம்.
இவ் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என ஜோதிடத்தில் கூறப்பெற்றுள்ளது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம். இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்பது ஜோதிடப் பழமொழி. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாதி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் வைத்து ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கருப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி, அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.
வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றைய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் சனீஸ்வரன் நீதி தவறாதவர். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவி மூலம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடமானார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
உலகிலேயே சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் இரண்டே இடங்களில் மாத்திரம் அமைந்துள்ளது. மற்றைய ஆலயங்களில் சனீஸ்வரர் பரிவார மூர்த்தியாக அல்லது நவக்கிரகங்களுடன் இணைந்து காணப்பெறுகின்றார்.
தென் இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு என்னும் ஊரில் சனீஸ்வரனுக்கென தனிக்கோவில் உள்ளது. சனீஸ்வரனுக்கு அமைக்கப்பட்ட இரண்டாவது தனிக்கோவில் திருகோணமலை நகரில் மடத்தடிச்சந்திக்கு அருகில், ரெயில் நிலையத்திற்குப் போகும் வீதியில் வலது புறம் அமைந்துள்ளது
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
இந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் ஜோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கருப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனிக்கிழமை விரதம் எளிமையானது. புனிதமானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயத்தில் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.
நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்...
நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது.
அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதகருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.
இத்தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணெய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணெய் வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.
நவக்கிரகங்களை வழிபட புரட்டாசி சனிக்கிழமைகள் விசேடமான தினங்களாகும். நவக்கிரகங்கள் வாழ்வில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களும் அவை ஆட்சி செய்யும் துறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
சூரியன் : தன்நம்பிக்கை, அதிகாரம், தகுதி
சந்திரன் : மனம், உணர்ச்சி
செவ்வாய் அல்லது அங்காரகன் : தைரியம், கெட்டித்தனம், உடற்சுகம், பிள்ளைகள்
புதன் : புத்தி, கல்வி கற்பதும் கற்பிப்பதும்
வியாழன் அல்லது குரு : சமயப்பற்று, செல்வாக்கு, பெண்களின் மணவாழ்வு
வெள்ளி அல்லது சுக்கிரன் : சுகவாழ்வு, கலை, கலாச்சாரம், அழகானசூழல்
சனி : நீண்ட ஆயுள், களேபரங்கள், கஷ்டங்கள், ஆத்மீகம்
ராகு, கேது : உலக ஆசைகள், மோட்சம் (சுதந்திரம்)
சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கருப்பு எள்ளு கருப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி நவக்கிரகங்களை வணங்குவோம். சுட்டி, கருப்பு எள், நல்லெண்ணெய் ஆகியன கோவிலில் கிடைக்கும்.
பக்தர்களின் வசதிக்காக புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 9.00 மணி வரை சிவன் கோவில் திறந்திருக்கும்.
ஓம் நமச்சிவாய!
- விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.
- ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் (ஸ்ரீ ராகு தலம்) நாகநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தவக் கோலத்தில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ கிரி குஜாம்பிகைக்கு இருபுறமும் திருமகளும் கலைமகளும் பணி செய்ய நவசக்திகள் புடைசூழ பிந்து மத்தியில் நின்று தலம் இயற்றும் அம்பிகையின் தவச்சாலை காவலர்களாக ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீபால சுப்பிரமணியர், ஸ்ரீபால பைரவர், ஸ்ரீபால சாஸ்தா ஆகிய 4 பேரும் உள்ளனர்.
இவர்களில் ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.
இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் உடல் நோயாகிய சுரத்தை தீர்த்து அருள்புரியும் மூர்த்தியாவார். இவ்விநாயகரை செவ்வாய், வெள்ளி, சதுர்த்தி ஆகிய நாட்களில் வணங்கி அபிஷேக ஆராதனை செய்து மிளகு நீர், மிளகு அன்னம், நீவேதித்து பிரசாதம் பெற்று உண்டு வந்தால் தீராத சுரம் தீர்ந்து நலம் பெறுவர் இடர்கடி கணபதியாக விளங்கும் இவ்விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்