search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Vivek"

    பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek
    சென்னை:

    நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–

    மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ActorVivek
    கஜா புயல் பாதிப்பில் மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #Gajastorm #ActorVivek

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடிகர் விவேக், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஒரு லாரியில் நேற்று கொண்டு வந்தார். அவற்றை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இது குறித்து நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களை அரசுதான் முழு நிவாரணம் வழங்கி மீட்க முடியும். அதற்காக நிவாரண உதவி செய்ய முன்வரும் சமூக ஆர்வலர்களை உதாசீனப்படுத்த கூடாது. அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

     


    இயற்கை பேரிடர் என்பதால் அரசை யாரும் குறை சொல்ல கூடாது. மீட்புக்களத்தில் அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் சமைத்த உணவை வழங்குவதை விட குழந்தைகளுக்காக மருந்து, பால் பவுடர், போர்வை, பெட்ஷீட், பாய், கொசுவலை ஆகியவற்றை கொடுத்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #ActorVivek

    60 சதவீதம் வனப்பகுதி கொண்ட நீலகிரி மாவட்டத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
    ஊட்டி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று ஊட்டி ஸ்டீபன் தேவாலயத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா மற்றும் சிறப்பு விருந்தினர் நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு உறுதி மொழி ஏற்றனர்.

    பின்னர் விவேக் கூறும் போது, நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இதனை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது அவசியம். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாவட்டமாக்க வேண்டும். நீர்நிலைகளை தூய்மை படுத்தி பாதுகாக்க வேண்டும். ஒரு லட்சம் மரக்கன்று நட உறுதி மொழி எடுக்கப்பட்டது என்று கூறினார்.

    பின்னர் தூய்மை ரத வாகனத்தை தொடங்கி வைத்து காந்தல் பகுதியில் குப்பைகளை அகற்றினார்.
    ×