என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advisory meeting"

    • திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சக்தி கேந்திரா கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏ.டி ராஜேந்திரன், பொதுச் செயலாளர் எத்திராஜ், ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் கலந்து கொண்டார். இதில், 50 ஆண்டுகளுக்கு மேலாக தனித் தொகுதியாக இருக்கும் வானூர் சட்டமன்ற தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வது.

    வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வானூர் தொகுதி மக்கள் பிரச்சினைகள் பா.ஜனதா தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அழுத்தம் தந்து வானூர் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்ப்படும் என மீனாட்சி நித்திய சுந்தர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் செந்தில், முருகன், ஏழுமலை, சவுரிராஜன், பிரகலாதன் மற்றும் பா.ஜனதா கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது
    • 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா வருகிற 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு திருவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விழா நடக்கும் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

    • திருச்செந்தூர் நா.முத்தையாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ஏப்ரல் 16-ந்தேதி திருச்செந்தூர் ஆதி திராவிடர் பறையர் சமுதாய மக்கள் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் நா.முத்தையாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் முரசுதமிழப்பன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கடந்த 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க கோரி ஏப்ரல் 16-ந்தேதி திருச்செந்தூர் ஆதி திராவிடர் பறையர் சமுதாய மக்கள் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கோவில் முதுநிலை பணியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், அகில இந்திய தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் சின்னத்துரை பாண்டியன், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் அரசூர் ராஜ் குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பன்னீர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் அமிர்த லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஞான குமார் நன்றி கூறினார்.

    • புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
    • மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடக்க உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் சேவை சங்கங்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புக்கள், அரசுத்துறை அலுவலர்க–ளுடன் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உங்களை சார்ந்த குடும்பங்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வசிப்பு திறன் மேன்படுத்தும் ஒன்றாக இந்த புத்தக திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புத்தக திருவிழாவில் உள்ளுர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழா வெற்றி பெற பங்கெடுத்து கொள்ள வேண்டும்.

    எதிர்கால சங்கதிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக திருவிழா அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒவ்வொருவரும் தன்முனைப்போடும், அர்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புத்தக திருவிழா லோகோவினை மாவட்ட கலெக்டர்.சாருஸ்ரீ வெளியிட்டார். இவ்ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தமிழ் சங்கம், விவசாயிகள் சங்கம், கல்லூரி முதல்வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களின் பிரிதிநிதிகள், மற்றும் வர்த்தக சங்கம், அனைத்து தரப்பு பிரிதிநிதிகள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
    • பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தரணி தலைமையில், கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 19 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்யவும், கடைமுன் யாரும் குடிக்க அனுமதிக்கக்கூடாது, மொத்தமாக யாருக்கும் மதுவகைகளை ஒரே நபருக்கு விற்பனை செய்வது கூடாது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் அம்மாபாளையம், அழகுசேனை, விநாயகபுரம், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது.
    • கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது. மாநில செயலாளர்கள் ராம.அய்யப்பன், ரூபன் தாஸ், ருத்ரகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் சக்திவேல் பட்டுரோஸ், சரவணபெருமாள், பழனி வேலன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இன்னாசி ராக், விவசாயிகள் நல அணி ஆதிசங்கர், தொழிலாளர் அணி கண்ணன், மாணவரணி மகின்பர்வத், மங்கலம் பொறுப்பாளர் சுப்ரமணி, கமல்பாலா, கமல் ஜிப்பி, தேவ்நாத், கமல்ராஜ், முகுந்தன், மோகன், செழியன், வாசுகி, மல்லிகா, ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கட்சியின் மாநில நற்பணி இயக்க அணிக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பிற்கு விண்ணப்பம் பெறப்பட்டு நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்த நபர்களை தலைவர் கமல்ஹாசனுக்கு பரிந்துரை செய்வது, கமல்ஹாசன் பெயரில் உள்ள ரசிகர் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது, கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நற்பணி இயக்க அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கடந்த 6-ந் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சமத்துவ தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், துணை செயலாளர் மில்லை தேவராஜ், வக்கீல் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன்,மாநகர செயலாளர் உதயசூரியன், அவைத்தலைவர் மதியழகன், செல்வராஜ், காமராஜ்,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடக்கிறது

    திருப்பத்துார்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடுக்கப்படும் அடக்குமுறை மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதைக் கண்டித்தும், பாஜ அரசின் சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், அதை முறியடிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வழிகாட்டுதல்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், தீவிர பரப்புரை மேற்கொண்டு, மக்கள் ஆதரவைத் திரட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாரத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில், வரும் 15-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் ெரயில் மறியல் போராட்டம் செய்தல் வகையில், ஆம்பூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது, 20-ந்தேதி திருப்பத்துாரில் இயங்கி வரும் தலைமை தபால் நிலைய கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருப்பத்தூர் மாவட்ட மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு அவர் செய்து வரும் தவறுகள் குறித்து கடிதம் அனுப்புவது ஒரு சட்டசபை தொகுதியில் 100 இடம் என 400 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவது என்பன பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நீதிக்கு பங்கம் வருகிறதோ, அப்போது எல்லாம் காங்கிரஸ் நீதியின் பக்கம்தான் நிற்கும்.

    ராகுல்காந்தி, மோடியை பார்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்படுவது நியாயமில்லை. கர்நாடகாவில் ராகுல் பேசியது திரித்துக்கூறப்பட்டுள்ளது.

    வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும். அல்லது பிரதான எதிர்கட்சியாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் அது நடக்கும். அண்ணாமலை அவரின் வாட்ச்பில்லை 1-ந்தேதி காட்டுவேன் என்றார்.

    பின்னர் 14-ந்தேதி என்கிறார். அவரின் நேர்மை அவ்வளவுதான். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத ஒன்று. அப்படி இருந்தால், இப்போது கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டிருக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன் ஆசையை கூறித் திரிகிறார்.

    மத்திய அரசின் பல திட்டங்கள் காணாமல் போய் விட்டது. இதற்கு எடுத்துக்காட்டு உஜ்வாலா திட்டம். தமிழக காங்கிரஸ் தலைவர் 4 பேருடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார் என தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

    அன்றைய தினம், ெரயில் ஏறுவதற்காக சென்ற போது, அவருக்கு ராகுல்காந்தி குறித்த தகவல் கிடைத்தது. அதனால், உடன் இருந்தவர்களுடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார்.

    அதுதான் காங்கிரஸ். ஒன்றை ஆளாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்போம். அதைத்தான் எங்கள் தலைவரும் செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுகடைகள் மூட வலியுறுத்தல்
    • வல்லண்டராமம் கிராமத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரித் திருவிழா வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது.

    அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    புஷ்பரத ஏரித்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார்.

    அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய ஊர் மேட்டுக்குடிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை வரவேற்று பேசினார்.

    வருகிற 9-ந் தேதி இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்ப ரதத்தில் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்ற உடன், வல்லண்டராமம் கிராமத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    10-ந் தேதி காலை 5.30 மணி வரை நடத்திவிட்டு 6 மணிக்கு புஷ்பரதத்தை அண்ணாச்சி பாளையம் கிராமத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். ஆடுகள் மற்றும் கோழிகளை கோவில் முன்பு உள்ள தென்னந்தோப்பில் பலியிட வேண்டும். புஷ்பரதத்தின் முன்பு ஆடு, கோழிகளை பலியிட அனுமதி இல்லை.

    புஷ்ப ரதம் செல்லும் சாலைகளில் தாழ்வாக உள்ள மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும். சுகாதார வசதி, முதலுதவி சிகிச்சை முகாம், 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும், கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடிநீர் அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்களை பழுது பார்க்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் 2 வது பெரிய திருவிழா பொற்கொடியம்மன் தேர் திருவிழா ஆகும் இதனை அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும், மேலும் சுற்றுப்பகுதியில் இருக்கும் அரசு மதுகடைகளை ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் கோவில் கணக்காளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சுகுமார், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அணைக்கட்டு பிடிஓ சுதாகரன், ஊர் மேட்டுக்குடிகள், அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையம் கூட்ட அரங்கில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு தோல் தொழிலதிபர்கள் மற்றும் இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பரிதா குரூப் சேர்மன் ரபீக் அகமது தலைமையில் 30 மேற்பட்ட தோல் தொழிற்சாலை கம்பெனிகளின் உரிமையாளர்கள் ஷூ கம்பெனி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது தங்கள் தொழில் சம்பந்தமான மத்திய அரசு தங்களுடைய பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    இதில் மத்திய அமைச்சர் மற்றும் மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது.

    நெல்லை:

    பாளை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பள்ளமடை பாலமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அமைப்பு சாரா தொழிலாளர் அணி சிவந்தி மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், மோகன், மேகை சக்திகுமார், சிந்து முருகன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு , வட்ட செயலார் பாறையடி மணி, வண்ணை கணேசன், பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது, 8 பேர் கட்சி பொறுப்பிலும், 3 பேர் இளைஞர் பாசறை, 2 பேர் தகவல் தொழில்நுட்ப அணி மற்றவர்கள் அணி பொறுப்பிலும் இருக்குமாறு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

    தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.

    அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×