search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agnipath Project"

    • திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், வேங்கைராஜா, ஒழுங்கு நடவடிக்கை குழு முகமது சித்திக், துணை தலைவர் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரோஜாம்மாள், காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவர் அப்பாஸ் மந்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது.
    • அக்னிபத் திட்டத்துக்கு பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மத்திய அரசு ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது.

    அக்னிபத் திட்டத்துக்கு பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சிகள் சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கீதநாதன், அபிஷேகம், சேதுசெல்வம், மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், செந்தில், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், மோதிலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை எடுக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மறைமலையடிகள் சாலை சுப்பையா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார். சி.பி.ஐ. மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர் எழிலன், துணை தலைவர் எரிக்ரேம்போ, ரவீந்திரன், சசிதரன், பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நிர்வாகிகள் சுகதேவ், ரஞ்சித், யசோதா, ராமசாமி, முருகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    • சங்கராபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை கண்டித்து, கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பாஸ்கர், பகத்சிங் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, தலைவர் பழனி, துணை செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.

    ×