என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture"

    • அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது
    • டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பிசான பருவத்திற்கு தேவையான அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தண்டுதுளைப்பான், புகையான், இலைசுருட்டுபுழு உள்ளிட்ட நெல்பயிரை தாக்கும் பூச்சிகளுக்கும், குலைநோய், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பிசான பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான டி.பி.எஸ் 5 மற்றும் டி.கே.எம்.13ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது. மேலும் அம்பை 16 ரகத்தை விட அதிக மகசூல் தரக்கூடியது. சராசரியாக 6300கிலோ வரை மகசூல் தரக்கூடியது. டி.கே.எம்.13 ரகம் 130நாட்கள் வயதுடையது. இது கர்நாடக பொன்னி ரகத்தை விட 10சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியது.

    இவ்விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார்நகல் மற்றும் சர்வே எண்ணுடன் திருச்செந்தூர் வட்டார வோளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
    • வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.

    ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

    • வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்தது.
    • செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்ததன் காரணமாக வாழை விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

    தென்காசி குத்துக்கல்வலசை வாழைத்தார், இலை மார்க்கெட்டில் வழக்கத்தை காட்டிலும் விவசாயிகள் அதிகளவில் வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர். செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வாழைத்தார்களை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் முகாமிட்டு வாங்கிச் சென்றனர்.

    • மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • அதிகாரிகள் பயிர் சேதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    தென்காசி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணையா தலைமையில் ஊத்துமலை, ராஜ கோபால பேரி, அச்சங்குட்டம், வாடியூர் மற்றும் வீராணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வீரகேரளம் புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துமலை, ராஜகோபால பேரி மற்றும் ஆலங்குளம் சுற்றியுள்ள மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் பெரு மளவில் உள்ளன. அவை அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    சேதம் அடைந்த பயிர்கள், நிலத்திற்கான இழப்பீடு தொகையும் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே காட்டுப்பன்றியை வனவிலங்கு சட்டத்திலிருந்து நீக்கவும், ஊத்துமலை பகுதிக்கு வடபுறம் போதிய மழை இல்லாமல் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிறு வகைகள் கருகி உள்ளன. எனவே வனத்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கிட முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    கிடப்பில் போடப் பட்டுள்ள ரெட்டை குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உரு வாக்கிடும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


    • கல்லணை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர்.
    • சாப்பிடும் போது உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக்கொண்டனர்

    நெல்லை:

    விவசாயம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர். டவுன் சொக்காட்டான் தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நாற்று நடவுதல், நெல் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் கல்லணை மாணவிகளும் விவசாய பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது மாணவிகள் கூறும் போது, விவசாய பணிகளை செய்யும்போதுதான் விவசாயிகள் எவ்வளவு கடினமான பணிகளை செய்து உணவு உற்பத்தி செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே பொதுமக்கள் சாப்பிடும் போது உணவுகளை வீணாக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விவசாயத்தை காப்போம் என மாணவிள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    • மதுரை அருகே கூட்டுறவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது.

    பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் வரவேற்றார்.

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜீவா, கூட்டுறவுச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்துரைத்தார். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தர்மராஜ் கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    மதுரை கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 22.45 குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து 103 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 107.32 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.69-க்கும், சராசரி விலையாக ரூ.88.36-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.99-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 495-க்கு விற்பனையானது.

    அதேபோல் 21.36 குவின்டால் எடை கொண்ட 29 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.136.19-க்கும், குறைந்த விலையாக ரூ.110.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.39-க்கும் என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது.

    12.69 1/2 குவிண்டால் எடை கொண்ட 39 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.75.60-க்கும், குறைந்த விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என ரூ. 94 ஆயிரத்து 708-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    • மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
    • பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கட்டிமேடு ஊராட்சி இணைந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் பெறுவது எவ்வாறு என விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் விழிப்புணர்வு நடைப்பயணம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி இரவிச்சந்திரன் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைசாமி கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் ரவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உழவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    வேளாண்மை உதவி பொறியாளர் கௌசல்யா பேசும்போது,கிராம அளவில் வேளாண்மை வாடகை இயந்திரங்கள் வாடகை சேவை மையங்களில் மானியத்தில், அமைப்பது வேளாண்மை இயந்திரங்கள் வாடகை முன் பதிவிற்கு இ-வாடகைக்கு திட்டம் அமைப்பது பற்றி விரிவாக பேசினார் .

    உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் வீட்டில் பின்புறம், மாடித்தோட்டம் பழ வகை மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் வேளாண்மை உதவி ஆலுவலர்கள் ரமேஷ், சுவாமிநாதன் மற்றும் விவசாயி சங்க தலைவர் அப்துல் ரஹ்மான் செயலர் செந்தில்குமார், தீவிர விவசாயிகள் முகமது மஸ்கின், ஹலீல் ரஹ்மான்,அப்துல் சலீம் ,அப்துல் சலாம் , அப்துல் முனாப் ஆசிரியர் சாகுல் ஹமீது கல்வியாளர் ரவிச்சந்திரன் , தண்டபாணி ஊராட்சி உறுப்பினர்கள் இளம் விவசாயி பகுருதீன் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் உழவு மெசின், பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் விழிப்புணர்வு பிரச்சார நடைபெறும் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் செயலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.

    • கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.
    • மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகளின்அனுபவங்களை கேட்டறிந்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே கோபுர ராஜகோபுரம் கிராமம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தஞ்சை ஆர். வி.எஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் 11 மாணவ மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சூரிய பிரியா, பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

    நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகள் குறித்தும், அனுப வங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் பாரதிராஜா, திவ்யா, ரம்யா, ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செயல்பட்டனர்.

    ஏற்பாடு களை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஜெனோ அபிஷா, கன்னிகா லாவண்யா, ஜெயதாரணி கிருத்திகா, லட்சுமி ஸ்ரீ உள்பட கலந்து கொண்டனர்.

    • பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை

    தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

    இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    • மீன் அமிலம், ஐந்திலை கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
    • களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் கிராமங்களிலிருந்து இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

    ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 50 விவாசயிகள் கலந்துகொண்டு இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா ஜீவாமிர்தம், மீன் அமிலம், ஐந்திலை கரைசல், அமிர்த கரைசல் தேமோர், கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை பற்றி செயல்விளக்கத்தோடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதளின்றி பயிர்கள் நன்றாக வளர்ந்து நஞ்சில்லா தரமான உணவை உற்பத்தி செய்யலாம் எனவும்,

    கோழி மற்றம் கால்நடைகள் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து, பயிர்சுழற்சி பசுந்தாள் உரம், பூச்சி நோய் மற்றும் களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    நிகழ்ச்சியில் அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல்துறை பேராசிரியார் ஆனந்தகிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்துகொண்டார்.

    ×