search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ak antony"

    • தனது மகன் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறானது.
    • காங்கிரஸ் என்னுடைய மதம் என்றார் ஏ.கே. அந்தோணி.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. அந்தோணி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அனில் கே. அந்தோணியை பா.ஜனதா பத்தனாம்திட்டா தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆன்டோ அந்தோணியை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஏ.கே. அந்தோணி கூறும்போது "தனது மகன் அனில் கே. அந்தோணி தோல்விடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். எனது மகனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆன்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும்.

    என்னுடைய மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறு. காங்கிரஸ் என்னுடைய மதம்.

    இவ்வாறு ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

    மகனின் அரசியல் பிரவேசம் மற்றும் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் ஏ.கே. அந்தோணி இவ்வாறு அதில் அளித்துள்ளார்.

    • அனிலின் முடிவு மிகவும் தவறானது என ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
    • பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி.

    சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய அனில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில், அனில் அந்தோணி பா.ஜ.க.வில் சேர்ந்தது பற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தியுள்ளது. அது ஒரு மிக தவறான முடிவு. ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் இந்தியாவின் அடித்தளம் ஆகும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததும், பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் நீர்த்துப்போக செய்து வருகின்றனர்.

    பா.ஜ.க. சீரான தன்மையில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கருத்து. அவர்கள் நாட்டின் அரசியல் சாசன மதிப்புகளை அழித்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தலில் களமிறங்க மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் முடிவு செய்தார்.

    ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை காரணமாக, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முதல்-மந்திரி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே கெலாட்டுக்கு பதிலாக அங்கு சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகவும் முடிவு செய்தனர்.

    இதனால் மாநில அரசில் குழப்பம் ஏற்பட்டது. எனவே கட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர், அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்காக அவர் டெல்லி புறப்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். எனினும் தேர்தலில் போட்டியிடுவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.அந்தோணியை, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

    அப்போது, நடைபெற உள்ள கட்சித்தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்தலில் களமிறங்க சாத்தியமுள்ள வேட்பாளர்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

    இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad 
    திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் முடிவு செய்வார்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்க வருகிற 16-ந்தேதி சென்னை வருகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு அவர் டெல்லி செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சி தமிழகத்துக்கும் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். மோடி அரசை அகற்றுவதற்கும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ராகுல்பிரதமராக வருவார்.

    மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் பேசப்படும். தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர்கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்கள். ரஜினி அரசியல் கட்சி பணியைத் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார். கமலும் அறிவித்துள்ளார். எல்லோரும் வரட்டும்.


    மு.க.ஸ்டாலின் சோனியாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலில் 16 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மீதி தொகுதிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியை வீழ்த்த தகுதியான தலைவர் ராகுல் காந்தி தான் என்பது தான் பரவலான கணிப்பு. வருகிற தேர்தல் அதை நிரூபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் , அணி தலைவர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தணிகாசலம், தாமோதரன், மெய்யப்பன், கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி.விசுவநாதன், இளைஞர் அணி தலைவர் அசன் ஆரூண், மகளிர் அணி தலைவி. ஜான்சிராணி மீனவர் அணி தலைவர் கஜநாதன், சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாஷா, பவன் குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், ரூபி மனோகரன், சிதம்பரம், ராஜேஷ்குமார், சிவராஜசேகர், எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #AKAntony #congress #mkstalin

    ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உண்மைகளை மறைப்பதாக முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டியுள்ளார். #AKAntony #NirmalaSitharaman #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுபற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2013-ம் ஆண்டு 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எனது தலையீடு இருந்ததாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது தவறான தகவல். முந்தைய அரசு வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட விலையை விட ரபேல் போர் விமானத்தை குறைந்த விலைக்கு வாங்கிட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக ராணுவ மந்திரி கூறுகிறார். அப்படியென்றால் நீங்கள் ஏன் 126 ரபேல் விமானங்களை வாங்காமல் 36 ஐ மட்டும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தீர்கள்? எனவே, நாங்கள் ஒரு விமானத்தை வாங்கிட ஒப்பந்த செய்துகொண்ட தொகையையும், நீங்கள் வாங்குவதற்கு செய்து கொண்டுள்ள விலை பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

    மேலும் இப்பிரச்சினை பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன்?... ராணுவ மந்திரி இந்த விவகாரத்தில் உண்மையான தகவல்களை மறைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AKAntony #NirmalaSitharaman #RafaleDeal 
    ×