என் மலர்
நீங்கள் தேடியது "alcohol"
- ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார்.
- இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார்.
புதுச்சேரி:
அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார். புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பொதுப்பணித்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ரவிக்குமார் (வயது47). பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரான இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி அவரது மனைவி 2 மகள்களுடன் நாகப்பட்டி னத்தில் தாய் வீட்டில் தங்கி ரேசன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
அவ்வப்போது ரவிச்சந்திரன் நாகப்பட்டி ணத்துக்கு சென்று மனைவி-மகள்களை பார்த்து விட்டு வருவார்.
இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார். சம்பாதிக்கும் பணத்தை அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு அவரது சகோதரர் சிவக்குமார் அறிவுரை கூறி இனிமேல் மது குடிக்க வேண்டாம் என்று கூறியும் அதனை செவிசாய்க்காமல் மீண்டும் ரவிச்சந்திரன் மது குடித்து வந்தார்.
இந்தநிலையில் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அங்குள்ள ஊழியர் ராஜி இதுபற்றி ரவிச்சந்திரனின் சகோதரர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமார் விரைந்து வந்து ரவிச்சந்திரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
- இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
ஈரோடு, டிச. 9-
ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.
கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
- படுகாயமடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் கூலிதொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி ( வயது 41) விவசாயி. இவரது வீட்டில் அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுபேந்திரன் ( வயது 39) என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததால் அவர் சுபேந்திரனை வேலைவிட்டு நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரவக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெட்டி கொலை செய்யப்பட்ட சுபேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், 1 ஆண் ,2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.
- மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனையில் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து 581 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
- கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் குடியரசு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது.
போலீசார் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சீகூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றதாகவும், எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது.
- பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 70) இவர் திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் போலீசார் வாகன சோதனை செய்ததில் சடையப்பபுரம், மேலத்தெரு ராமையா மகன் கோபாலகிருஷ்ணன் என்ற கண்ணன் (42) என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 96 குவாட்டர் பாட்டில்களையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு.
- விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.
மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி சோழபுரம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மனித குலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு, சுவாச குறைபாடு, கண் சிவத்தல், பார்வை குறைபாடுகளும் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் விளைவுகளை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் சோழபுரம் காவல் நிலையத்தில் மது போதை இல்லாத சோழபுரம் உருவாக கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியில் சோழபுரம் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுமையா, சாதிக், பரக்கத்அலி, ரியாஜ், அர்ஷ் முகமது, தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தனது வீட்டின் முன்பு திருட்டுதனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
- தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது சென்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
இவரது மனைவி அம்சவள்ளி (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு திருட்டு தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்த அம்சவள்ளியை கைது செய்தனர்.
- மது விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
- கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.
மும்பை:
இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.
இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வழுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
அதிக வரி விதிப்பு, சட்ட விரோத மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை சிகரெட் சந்தையில் அதன் விற்பனை அளவை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.