என் மலர்
நீங்கள் தேடியது "alcoholism"
- சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.
இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
- கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
- என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது
மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.
மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.
- ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.
சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.
தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.
பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.
சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.
வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.
பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.
பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.
எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
- அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.
- குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27).
இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். விருந்து முடிந்த பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து விட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மோகனசுந்தரி நேற்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் சரத்குமாரும் அதே சேலையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமார், மோகனசுந்தரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோரக்பூரில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம்
- குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர்களின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்த இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் ருத்ராபூரில் உள்ள சோட்டி காசி என்றும் அழைக்கப்படும் சிவன் கோயிலில் கவிதாவும், பப்லு என்கிற குஞ்சாவும் கடந்த வியாழன் மாலை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கோரக்பூரில் இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளனர்.
தங்கள் இருவரின் கணவர்களும் குடிகாரர்களாகவும், தினமும் தங்களுடன் சண்டைபோட்டுத் துன்புறுத்துவதையும் குறித்து இருவரும் தத்தமது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. எனவே தற்போது வீட்டை விட்டு வெளியேறி ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.
திருமணம் குறித்து பேசுகையில், இருவரது கணவர்களும் மது அருந்திவிட்டு தினமும் தங்களிடம் சண்டை போடுவதாக கவிதா கூறினார். நாங்கள் இருவரும் ஏற்கனவே காதலித்தோம். எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் வீட்டையும் கணவர்களையும் விட்டு வெளியேறி ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். திருமணம் முடிந்து இருவரும் கோரக்பூர் செல்வதாகவும், அங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம் என்றும் கூறினார்.
சமூகம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலை இல்லை என்றும் குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
- இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
- இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியே இறுதிச்சடங்கை நடந்த மகன்கள் சண்டையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் வெளியூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக்கிழமை ) உயிரிழந்தார்.
இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்வேன் என தம்பியிடம் கிஷன் கூறினார். ஆனால் தம்பியோ தானே இறுதிச் சடங்கு செய்வேன் என அடம்பிடித்தார். இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே மதுபோதையில் வந்திருந்த அண்ணன் கிஷன், தந்தையின் உடலை வெட்டி அதில் பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய தர வேண்டும் என்றும் மீதி பாதி உடலை வைத்து தம்பியை இறுதிச் சடங்கு செய்துகொள்ளுமாறும் தகராறு செய்யத்தொடங்கினார்.
சகோதரர்களின் சண்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.
- ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
- சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.
ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
- வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரணமாக உயிர் பிழைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈரக்கஞ்சையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மது பழக்கத்தை நிறுத்துமாறு முத்துமாரி பலமுறை கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
2 மாதத்துக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக முத்துமாரி பிளீச்சிங் பவுடரை கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரண மாக உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் மனைவி தற்கொலைக்கு முயன்றும் ஈரக்கஞ்சையன் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த தின்னரை எடுத்து முத்துமாரி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (38). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ராஜமுருகன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.