search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amavasya"

    அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    மறைந்த நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும்.

    இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும். கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

    இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர். அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    வாசகர்களே... இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசை தினமாகும். அன்று தர்ப்பணம் கொடுத்து பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும்.
    அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர்.

    சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை யன்று நடத்துகின்றனர்.
    முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

    சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
    நம்மை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவா சையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாத வர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

    உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடி களையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமா வாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

    முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு வரும் இதைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு தை அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிறு) நள்ளிரவு 12.58 மணிக்குத் தொடங்குகிறது. திங்கட்கிழமை இரவு 3 மணி வரை உள்ளது. எனவே திங்கட்கிழமை அதி காலையில் புனித நீராடி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யலாம்.

    நாளை மறுநாளே பித்ரு பூஜைக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் தான் திங்கட்க்கிழமை அதிகாலை முன்னோர் வழிபாட்டை தங்கு தடையின்றி சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்க முடியும்.
    தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொதுமக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இதன் மூலம் முன்னோர் களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிந்தனர்.

    இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் தேங்கியிருந்த நீரில் கரைந்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.


    தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் இன்று புனித நீராடிய காட்சி.

    முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். காவிரி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. அதில் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினார்கள்.

    அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல் குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
    மக்கள் கூடும் தலங்கள்

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.

    புனித நீராடல்

    ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பிடித்த உணவு படையல்

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோவிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோவில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள்.

    சூரியனின் கல்யாண விழா

    இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    லட்ச தீபம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

    மோட்ச தீபம்

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்

    அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா?

    தர்ப்பணம் என்பது 'திருப்தி' என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில் தான் செய்வர்.

    அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

    சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாள் தான் அமாவாசை. அமாவாசை தினம் அன்று ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் எள் கலந்த தண்ணீர் வைத்தால் முன்னோர்கள் வந்து பசியினை தீர்த்து கொள்வர். அன்றைய தினம் இதனை செய்ய தவறினால் அது தோஷமாக மாறிவிடும் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பணம் செய்து முடித்ததற்கு பிறகே, வீட்டில் பிற காரியங்கள் அதாவது பூஜைகள் எல்லாம் நடத்த வேண்டும். இந்த தர்ப்பணம் செய்வது கூட வீட்டில் இருக்கும் அனைவரது நன்மைக்காகத் தான் செய்யப்படுகிறது.

    ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள். 96 நாட்கள் தான் மிக மிக உத்தமமான நாட்கள் தாய், தந்தையரின் திதி நாட்கள் அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.

    திதி கொடுக்கும் போது பெயர் சொல்வதற்கு காரணம், ஒரே நாளில் பலருக்கு திதி கொடுப்பர். அது சரியாக முன்னோர்களுக்கு போய் சேருமோ என்று பலரும் எண்ணுவர், இனி இந்த சந்தேகம் யாருக்கும் வராது.

    துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு திதி செய்யும் நாட்கள் மிகவும் புண்ணியங்கள் தரும். இதனால் அவரவருக்கு சரியாக அந்த தர்ப்பணம் போய் சேரும்.
    மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

    தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களால் வந்தது என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.

    எந்த நட்சத்திரத்தில் என்ன பலன்?

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    நோயில் இறந்தவர்களுக்கு பிரதமையில் தர்ப்பணம்

    சிலர் நீண்ட நாட்கள் ஏதாவது தீராத கொடிய வியாதிகளில் சிக்கி மரணம் அடைந்து இருப்பார்கள். சிலர் கடைசி வரை புத்திர பாக்கியம் கிடைக்காமல் ஒரு வித ஏக்கத்துடன் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். சிலர் விபத்துகளில் உயிரிழந்திருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதிகளால் கை விரல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். இத்தகைய பித்ருக்களுக்கு பிரதமை திதியன்று வழிபாடுகள் செய்வது நல்லது.

    விவாகரத்தில் இறந்தவர்களுக்கு துவிதியில் தர்ப்பணம்

    விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம் சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு தூவிதியை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள்.
    அகன்ட பாரத தேசத்தில் சுழன்று வரும் அறுபது வருடங்களிலும் உத்தமமான மாதமாக புரட்டாசி மாதம் திகழுகின்றது. சூரிய பகவான் தன் சொந்த வீடான சிம்மத்திலிருந்து புறப்படுகின்ற மாதம் கன்யா மாதம் என்றும் பாத்ரபத மாதம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்த பாத்ரவத மாதத்தில் தான் நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நமக்கு பல விதமான பலன்களை தரத்தயாராக இந்த பூவுலகிற்கு வந்து நலம் தரப்போகும் எள்ளு கலந்த நீரை நெஞ்சார பருகி நமக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடன் கன்றுக்கிரங்கும் பசு போல் நம்மை வாழவைக்க இவ்வகையகம் வரும் மஹாளய பசமும் இம்மாதத்தில் தான் வருகிறது.

    ஒருவன் தான் ஜனிக்கும் போதே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் என்கிற மூன்று கடன்களுடன் பிறக்கிறான். பரந்தாமன் உறையும் தெய்வீக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் வீட்டில் தெய்வீக முறைகள் யாகங்கள், ஹோமங்கள் செய்வதாலும் தன்னுடைய தேவ கடன் அடைக்கிறான்.

    மஹான்கள் பாதங்களில் நமஸ்காரங்கள் செய்து அவர்களது நல்ல உபதேசங்களை கேட்டு வாழ்க்கையை நடத்துவதாலும் நம் கோத்ர பூர்வர்களான ரிஷிகளின் சரித்திரத்தை கேட்டும் வணங்கி வழிபடுவதாலும் ரிஷியினுடைய கடனையும் அடைக்கிறான். மூன்றாவதானதும் முக்கியமானது பல சாபங்களை தவிர்க்க வல்லதாகவும் இருக்கிற பித்ரு கடனை ஒருவன் மாதா மாதம் அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்பணங்களாலும் வருடாவருடம் செய்யும் திதி அன்ன சிராத்தத்தையும் சிரத்தையாக செய்து மேற்படி கடனை அடைக்கிறான்.

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள். இந்த இரண்டு அமாவாசை தினங்களிலும் பித்ருக்களை மிகக் கட்டாயமாக பூஜித்து தர்ப்பண தானங்கள் செய்ய வேண்டும்.

    இது தவிர மாதா மாத அமாவாசையிலும் செய்ய வேண்டியது. இதில் ஏதாவது சில சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாமல் போனதையும் குடும்பத்திலுள்ள சகலமான காலஞ்சென்றவர்களின் நினைவாகவும், கட்டாயம் மகாளய அமாவாசையன்று தர்ப்பண தானங்களை செய்ய வேண்டும். பவுர்ணமி ஆரம்பித்து மஹாளய பஷமான 15 தினங்களிலும் செய்வது மிக சிறப்பு. முடியாதவர்கள் கட்டாயம் மஹாளய அமாவாசை தினம் செய்ய வேண்டும்.

    இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு கடனை தீர்க்க பல புண்ணிய நதிகள், புண்ய புஷ்கரிணிகள் (குளங்கள்) இருக்கின்றன. இவைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே கும்பம் வைத்து நீர்நிரப்பி அதில் கங்கையை பூஜித்து அந்த தண்ணீரால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்துடன் திதி சிராத்தம் அன்ன ரூபமாக செய்வது சிறப்பு அல்லது அதற் குண்டான பொருட்களை வாங்கி ஆமரூபமாக செய்வதும் நல்லது. இதை சாதாரணமாக அரிசி கொடுப்பது என்பர். இதுவே ஆமரூபமான சிராத்தமாகும்.

    இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த பித்ருக்களுக்கு புண்ணிய நதி களோ புண்ணிய தீர்த்தங்களோ தென்புறத்தில் இருந்தால் மிக மிக மேன்மையானது. அப்படி சில புண்ணிய தலங்களில் கோவிலுக்கு தென்புறத்தில் புண்ணிய தீர்த்தங்கள் அமைய பெற்றிருக்கும். இந்த தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலனை தரவல்லது.

    இவ்வளவு பெருமைகளை உடைய புண்ணியதீர்த்தம் பாரத தேசத்தில் தென் பாகத்தில் திராவிட தேசத்தில் ஆன்மீகத்தின் அடித்தளமான தமிழ் நாட்டில் தலைநகராம் சென்னை பட்டினத்திற்கு அருகில் (சுமார் 45 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இந்த புண்ணிய பூமிக்கு புண்ணியாவர்த்த சேத்ரம் என்ற பெயர். இந்த புண்ணிய, புஷ்கரணிக்கு கிருந்தாப நாசினி என்றும் பெயர்.

    தற்போது இந்த திவ்ய தேச தலம் திருமழிசை ஆழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்று மங்களாசாசன திவ்யதேசமாக திரு எவ்வுள் என்றும் மருவி திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. புண்யாவர்த்தம் இந்த தலத்தில் தெரிந்தோ தெரியாமலோ புண்யம் செய்தால் அது பல மடங்கு ஆவர்த்தமாகிறது.

    ஒரு புண்ணியம் பண்ணினாலே பல பாபங்கள் நசித்து விடும் என்பது சாஸ்திரம். அப்படியிருக்க இந்த தலத்தில் யார் ஒருவரும் பாபம் பண்ண நினைக்க முடியாது. இத்தகு பெருமை வாய்ந்த புண்யாவர்த்த சேத்தரமான திருவள்ளூருக்கு புரட்டாசி மாதத்தில் வந்து ஸ்ரீவீரராகவனை வணங்கி ரிஷிகடனையும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பித்ரு தர்பணங்கள் செய்து பித்ரு கடன்களையும் நிறைவேற்றி நீங்காத செல்வங்கள் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ வைத்திய வீரராகவனின் திருவடிகளில் வணங்கி வழிபடுவோம்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.
    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்து விட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று சொல்ல மறந்து விடக்கூடாது. பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப் பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமை களையும் செய்தனர். அதை செஞ் சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையும் திரளானோர் வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. திருவள்ளூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

    கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’’ என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற் குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம்.

    அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
    முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.
    ‘மறந்தவனுக்கு மகாளயபட்சம்’ என்பது பழமொழி. அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.

    தென் புலத்தில் இருக்கும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் அவ்வுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பவுர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

    அந்நாட்களில் புனிதத் தலங்கள் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு வஸ்திரதானம், அன்னதானம், சிரமப்படும் மாணவர்களின் கல்விக்கு வித்யாதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்முடன் இருக்கும் நம் முன்னோர்கள் மகிழ்வுடன் நம்மையும் நம் வாரிசுகளையும் ஆசீர்வதிப்பார்கள்.

    ×