என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andrew Filintoff"
- ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
- கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.
2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான அணிகள் ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. இது அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறும் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த பிளின்டாப், ஹர்திக் பாண்டியா இந்தியாவின் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆண்ட்ரூ பிளின்டாப் கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் மட்டுமல்ல. உலகின் எந்த பகுதியானாலும் அணிகளுக்கு ஆல்ரவுண்டர் மிகப்பெரிய சொத்துதான். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் அணிக்கு மேட்ச் வின்னராக இருப்பது பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
இந்தியா ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் என மூன்று ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியாவை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எந்தவித டென்ஷனும் இல்லாமல் களத்தில் காணப்படும் அவர், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அவர் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்