search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animal Sacrifice"

    • கர்நாடகா அரசு, முதல்வர் சித்தராமையா மற்றும் தனக்கு எதிராக மிருக பலி கொடுத்து யாகம் என சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
    • தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது என கேரள அரசு விளக்கம்.

    கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே தனக்கும், முதல்-மந்தரி சித்தராமையா மற்றும் எங்கள் அரசுக்கு எதிராக சத்ரு பைரவி யாகம், மிருகபலி நடைபெறுவதாகவும், யாகத்தில் 21 ஆடுகள், 5 பன்றிகள், 21 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமானால் கேரளாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலை பாருங்கள் தெரியும் என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பகீர் தகவல் கூறினார்.

    இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் கண்ணூர் கண்டிபரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உளவுத்துறை மற்றும் போலீசார் மூலம் கேரள அரசு சிறப்பு விசாரணை நடத்தியது.

    விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்தனர். அதில் சத்ருபைரவி யாகமோ, மிருக பலியோ நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

    மேலும் கேரளாவில் உள்ள கண்ணூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது. அதுபோல் கேரளாவில் உள்ள மலபார் தேவசம் போர்டின் கீழ் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பெயர் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் கேரளாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மலபார் தேவசாம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் மிருக பலியுடன் கூடிய வழிபாடுகள் அல்லது பிரசாதம் கிடையாது என்று மலபார் என தெரிவித்துள்ளது.

    • திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தில் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன.
    • வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    திட்டக்குடி, ஏப்.26-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த அங்கம்மாள், ஈஸ்வரி, வள்ளி ஆகியோரின் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன. இரவு வெகுநேரமாகியும் பசுமாடு மீண்டும் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடினர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை

    இந்நிலையில் இன்று அதிகாலை கொரக்கையிலிருந்து ஆலம்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஒரமாக உள்ள வயல்வெளியில் தேடிப்பார்த்த போது வாகையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜமாணிக்கம் தனது வயல்வெளிக்கு மின்சாரம் தேவையில்லை என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சி யத்தால் 3 பசு மாடு மற்றும் 2 குரங்குகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×