search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Rahman"

    • ஏ.ஆர்.ரகுமானி மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார்.
    • இவர் பாடல் படப்பிடிப்பு விபத்திலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார். இவர் பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த பாடல் படப்பிடிப்பின் போது ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

     

    விபத்து நடந்த புகைப்படம்

    விபத்து நடந்த புகைப்படம்


    அவர் பதிவிட்டிருப்பது, "மேடையின் நடுவில் நின்றுகொண்டு பாடல் பாடி கொண்டிருந்தோம். பாடல் பாடுவதில் மூழ்கி இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நானும் என் குழுவும் நூலிழையில் உயிர் தப்பினோம். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்று பாதுகாப்பாக, உயிர் உடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட கிரேன் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.

    • தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    தனுஷ் 50-வது பட போஸ்டர்

    தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    ஏ.ஆர்.ரகுமான் - தனுஷ்

    மேலும், இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

    இதற்கு முன்பு தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.


    சென்னை தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான்

    அதாவது, இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

    • இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    இரவின் நிழல்

    மேலும், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் இந்தாண்டு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.


    ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் கொடுத்த பரிசு

    இந்நிலையில், நடிகர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பியானோ வடிவில் பரிசு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், "ஆன்மாவை அலங்கரிப்பது இசை.இசைப்புயலின் அலுவலக அலங்காரத்தில் என் பரிசும். மனதில் மகிழ்ச்சி tune ஆகிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அடுத்த பட கூட்டணியா இருக்குமோ என்றி சலசலத்து வருகின்றனர்.


    • சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெள்யிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இடம்பெற்றிருக்கும் அந்த போஸ்டரில் பாடல் நாளை 12.05 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் வெளியாகும் ஏ.ஆர்.ரகுமானின் புதல் பாடல் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
    • 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும் என நம்புவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் 2023-ஆம் ஆண்டு ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனுடன் மேலும் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    ஆஸ்கர் இறுதிப்பட்டியல்

    இதையடுத்து 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும் என நம்புவதாக தெரிவித்தார்.


    ஏ.ஆர்.ரகுமான்

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவிற்கு ரசிகர் ஒருவர் "ஆந்திர மக்கள் இன்னும் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால், மக்களாகிய நாம் நமது எதிரியை நேசிக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ஏ.ஆர்.ரகுமான், "நாம் அனைவரும் ஒரே குடும்பம் நமக்குள் தவறான புரிதல்கள் இருக்கலாம்.. ஆனால் நாம் ஒருவருக்கொருவர் நிற்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் லைட்மேன் குமார் இன்று காலை 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவர் திடீரென கால் தடுக்கி மேலிருந்து கீழே தவறி விழுந்து பலியானார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி (AR FilmCity) என்ற ஸ்டுடியோ உள்ளது. இங்கு சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு செட் போடப்பட்டு வருகிறது. இதற்காக சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக லைட்மேன் குமார் இன்று காலை 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கால் தடுக்கி மேலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார். உடனே அவர் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் குமார் கொண்டுவந்த வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அவரது உடல் பிரேத பரசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் கற்றார் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஏ.ஆர்.ரகுமான்

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது பிறந்தநாளான இன்று 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.

    ஏ.ஆர்.ரகுமான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 




    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதில் கலந்துக் கொள்வதற்காக இசையமையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

     


    இந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

    • நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • பிறந்தநாளையோட்டி நடிகர் ரஜினி இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

     

    தர்காவில் வழிபாடு செய்த ரஜினி

    தர்காவில் வழிபாடு செய்த ரஜினி

    இன்று காலை ரஜினி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.


    ரஜினி - ஏ.ஆர்.ரகுமான்

    இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


    ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரகுமான்

    இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது மிகப்பெரிய ஆசிர்வாதம்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார்.
    • விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.

    இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். முன்னதாக '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

     

    ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினி

    ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினி

    இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'விர்ச்சுவல் ரியாலிட்டி' மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

     

    லி மஸ்க் படத்தை கண்டு ரசித்த ரஜினி

    'லி மஸ்க்' படத்தை கண்டு ரசித்த ரஜினி

    இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ×