என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrested robber"
பொன்னேரி:
சென்னையை அடுத்த மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. பூட்டப்பட்டுள்ள வீடுகளை கண்காணித்து உள்ளே புகுந்து பணம், நகை, செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கடந்த மாதங்களில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. போலீசாரால் கொள்ளையனை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் ஒரு வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைவது பதிவாகி இருந்தது. அதனை அடையாளமாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் படம் பழைய குற்றவாளி மாயகண்ணன் என்கிற பாண்டியன் என தெரிய வந்தது. அவனை பிடிக்க திட்டமிட்டு கண்காணித்தனர். நேற்று முன்தினம் அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
கைது செய்யப்பட்ட கொள்ளையன் பாண்டியன் கொடுங்கையூரை சேர்ந்தவன். அவனிடம் இருந்து 5 செல்போன், 24 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. கொடுங்கையூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கைவரிசை காட்டிய அவன் தற்போது மணலிபுதுநகர் பகுதியில் முகாமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தை பயன்படுத்தி அந்நாட்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதை தொழிலாக செய்து வந்துள்ளான். போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்த பாண்டியன் தற்போது சி.சி.டிவி. கேமரா மூலம் மாட்டிக் கொண்டான்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன் பேட்டையில் வசிப்பவர் நிவேதா (வயது 29). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவதன்று நிவேதா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7¼ பவுன் நகையை திருடி சென்று விட்டான். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி நிவேதா பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இனஸ்பெக்டர் நாக ரெத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மன்னார்குடி அண்ணாமலை நாதர் சன்னதி தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் மகன் பாண்டியன் (30) நிவேதா வீட்டில் நகையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
பாண்டியனை பாபநாசம் கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 நாள் காலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்