search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested youths"

    திருவாரூரில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் டவுன், அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நூர்மைதீன் (வயது 20). இவர் பஸ் நிலையத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கியுள்ளார். அப்போது தனது செல்போனை கடையின் டேபிளில் வைத்திருந்தாராம். இதனை நோட்டமிட்ட 2 பேர் அந்த செல்போனை திருடிய போது நூர்மைதீன் பார்த்து சத்தம் போட்டுள்ளார். 

    உடன் அருகில் உள்ளவர்கள் இருவரையும் பிடித்து திருவாரூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருவாரூர் அருகே மேமங்கலம் இனியன் (19), திருவாரூர் அருகே தியானபுரம் ரஞ்சித்குமார் (16) என்பது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாரத் நேரு வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
    புதுவையில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய திருவண்ணாமலையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் 12 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டனர். மொத்தம் அந்த அட்டை பெட்டிகளில் 630 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் (வயது 38), கார்த்திகேயன் (34) என்பதும், இவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்களை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சியில் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை சங்கரன் பிள்ளை ரோடு பகுதியில் மார்க்கெட் உள்ளது. இந்த பகுதியில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகளை ஒரு வாலிபர் கிண்டல் செய்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மலைக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரை மடக்கி பிடித்தனர். 

    இதைப் போல் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மண்ணச்சநல்லூரை சேர்ந்த குணசேகரன் (வயது21), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வடிவேல்(20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ×