என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Association Advisory Meeting"
- தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.
- ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரிக் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் கலந்து கொண்டு காவல்துறை சார்பில் ஆலோசனைகளை வழங்கினார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரிக் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். கூட்டத்திற்கு ரிக் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் ஜெயக்குமார், உப தலைவர் சுப்பிரமணியம், உபசெயலாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் கலந்து கொண்டு காவல்துறை சார்பில் ஆலோசனைகளை வழங்கினார். ரிக் சங்க சட்ட ஆலோசகர்கள் வக்கீல் பரணிதரன், ஜோதிநாதன் கலந்து கொண்டு சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக பி.ஆர்.டி.ரிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன், கம்மின்ஸ் இந்தியா மண்டல சர்வீஸ் மேலாளர் சீனிவாசன், சுந்தரம் பைனான்ஸ் பிரதேச மேலாளார் விஜயகுமார், சிகாகோ நுமேட்டிக்ஸ் மண்டல விற்பனை மேலாளர் ஜித்தன் சந்திரன், தூசன் பாப் கட் இந்தியா லிமிடெட் விற்பனைத் தலைவர் செந்தில்குமார், திருப்பூர் ரிக் உரிமையாளர் சங்க தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்