என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attack"

    • ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
    • விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது. தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதிய வகை நோய் தாக்குதல் காரணமாக சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    எனவே, மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
    • இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.

    • ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது
    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர்.

    அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பார் ஊழியர் சேர்மன்ராஜ்(28) கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்தனர். அவர்கள் பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி பாரில் இருந்த டேபிள் மற்றும் சேர்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    மேலும் பார் ஊழியர் சேர்மன்ராஜை பீர்பாட்டிலால் தாக்கினர். இதனை மற்ற ஊழியர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த கும்பல் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய தொழிலாளி ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார்(23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன்(31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
    • 31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அதே லிப்டுக்குள் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

    தனது அருகில் வாலிபர் வருவதால் அந்த பெண் சற்று தள்ளி நிற்கிறார். ஆனால் அந்த வாலிபரோ பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மீண்டும் நெருங்கினார்.

    இதனால் அந்த பெண் திடீரென்று வாலிபரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். அத்துடன் நிற்காமல் அந்த நபரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த வாலிபர் அப்படியே நிலை குலைந்தார். இந்த சம்பவம் லிப்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

    31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி உள்ளனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர்.
    • வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணிபுரியும், அந்தோணி பிரபு, சரவணக்குமார் ஆகியோர் தலைமறைவான சுடலைமுத்துவை கைது செய்ய அவரை தேடி சென்றனர்.

    வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது அங்கு வந்த சுடலைமுத்துவின் தாயார் சீதாலெட்சுமி, மனைவி பேச்சியம்மாள், அதே ஊரைச் சேர்ந்த சேர்மதுரை ஆகியோர் போலீஸ்காரர் அந்தோணிபிரபுவை கீழே தள்ளி தாக்கினர்.

    மேலும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அத்துடன் போலீஸ்காரர்கள் பிடித்து வைத்திருந்த சுடலைமுத்துவுடன் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி போலீஸ்காரர் அந்தோணி பிரபு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி லீலாவதியின் அண்ணன் மாணிக்கராஜை அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆனந்தராஜ் அரிவாளால் வெட்டினார்.
    • ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், செல்வகுமார் ஆகியோர் கணேசனை அவதூறாக பேசி தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு, நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது50). தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி லீலாவதியின் அண்ணன் மாணிக்கராஜை அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆனந்தராஜ் அரிவாளால் வெட்டினார்.

    வழக்கு வாபஸ் பெற மறுப்பு

    இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெறும் படி ஆனந்தராஜ், கணேசனிடம் கூறி வந்தார். ஆனால் அதற்கு கணேசன் மறுத்து விட்டார்.

    சம்பவத்தன்று கணேசனை வழிமறித்த ஆனந்தராஜ், அவரது உறவினர் முருகேசன் மகன் செல்வகுமார் ஆகியோர் உனது மைத்துனரிடம் கூறி வழக்கை வாபஸ் வாங்கு என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

    கொலை மிரட்டல்

    இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், செல்வகுமார் ஆகியோர் கணேசனை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக, ஆனந்தராஜ், செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

    • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
    • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நடப்பு சம்பா, தாளடி நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது.

    இதன் அறிகுறிகள் என்ன வென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

    தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின் குளோரோடேரேனிலிபுருள் புளுபென்டிமைட் தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையோரம் வைக்கப்பட்டிருந்த “மதுபான பார்” ஒன்றின் இரும்பு பதாகையை அவர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. 
    • ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர் உட்பட 2 பேர் வெற்றிவேலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

    சென்னை :

    துரைப்பாக்கம், பார்த்தசாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிக்காக அங்குள்ள குண்டும் குழியுமாக கிடந்த சாலையை ஜே.சி.பி எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த "மதுபான பார்" ஒன்றின் இரும்பு பதாகையை அவர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர் உட்பட 2 பேர் வெற்றிவேலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதுகுறித்து வெற்றிவேல் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருஷ்ணன் தனது வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார்.
    • ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர், அரசன்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 83). இவர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார். நாங்குநேரி தேரடி தெருவை சேர்ந்த ஐகோர்ட் ராஜா என்பவர் கிருஷ்ணனிடம் சென்று அவர் பன்றி வளர்க்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று கிருஷ்ணன் நாங்குநேரியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஐகோர்ட் ராஜா அவரிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கிருஷ்ணன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐகோர்ட் ராஜாவை தேடி வருகின்றனர்.

    • 3 பேர் வெறிச்செயல்
    • முந்தி சென்ற போது நிலை தடுமாறியதால் ஆத்திரம்

    திருச்சி,

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 49). இவர் திருச்சி அரசு போக்குவரத்துக் கழகத்தில் புறநகர் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று வாத்தலை அருகே திருவாசி பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். அப்போது மண்ணச்சநல்லூர் தொடையூர் பாண்டியாபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (வயது 24) மற்றும் நண்பர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.திருவாசி பகுதியில் சென்றபோது அந்த பஸ் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது. இதில் மதன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3பேரும் அந்த பஸ்ஸை வழிமறித்தனர். பின்னர் கல்வீசி பஸ்ஸின் கண்ணாடியை நொறுக்கினர்.மேலும் டிரைவர் சச்சிதானந்தத்தின் கன்னத்தில் அறைந்து அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சச்சிதானந்தம் வாத்தலை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் மதன்ராஜ் மற்றும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு டிரைவரை தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ஆத்திரமடைந்த சந்தானம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு தப்பி ஓடினார்.
    • பலத்த காயம் அடைந்த கண்ணன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (58). விவசாயி. இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான சந்தானம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. 

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கிடையே மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தானத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×