search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto driver killed"

    • தன்னை கேலி செய்ததாக நினைத்த வாலிபருக்கும் முதியவருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகராறாக மாறியது.
    • ஆத்திரமடைந்த வாலிபர் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே கூழையனூரை சேர்ந்தவர் தவசி(56). அதேபகுதியை சேர்ந்தவர் பிரபு(26). இவர்கள் 2 பேரும் தேனி-குச்சனூர் சாலையில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது தவசி பிரபுவை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தவசியின் கழுத்தை அறுத்தார். ஆத்திரம் தீரும் வரை அவரை அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை பார்த்ததும் பிரபு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் விரைந்து வந்து தவசியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரபு போலீசில் சரணடைந்தார். தன்னை தவசி கேலி செய்ததால் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டையில் முன் விரோத தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி (28). ஆட்டோ டிரைவர். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முள்புதரில் மூர்த்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இதில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. கடந்த வருடம் திருமலை (29) என்பவைரை அரிவாளால் வெட்டியதால் மூர்த்தி ஜெயிலுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த திருமலையிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் திருமலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் மூர்த்தியை கொலை செய்தது தெரிய வந்தது.

    நேற்று மதியம் திருமலை அவரது நண்பர்கள் சரவணன், பசுபதி, மோகன் ஆகியோர் மூர்த்தியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக மூர்த்தியை சந்தித்த அவர்கள் இனி பழைய பகையை மறந்து நண்பர்களாக இருப்போம் என்று கூறினார்கள்.

    அனைவரும் மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்போம் என்று கூறி மூர்த்தியை மணலிக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லோரும் மது குடித்தனர். அப்போது மூர்த்திக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்தார்.

    திரும்பும் வழியில் கொருக்குப்பேட்டை-மணலி சாலை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே மூர்த்தியை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை 4 பேரும் சேர்ந்து கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    பின்னர் பிணத்தை தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே முள்புதரில் வீசி சென்றனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருமலை உள்பட 4 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவடியில் மின் மோட்டாரை கழற்றிய தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார்.

    திருநின்றவூர்:

    ஆவடி மந்தவமேட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த மின் மோட்டாரை பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் மகன் தேவராஜ் கழற்றி வேறு இடத்தில் பொருத்தினார்.

    இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தேவராஜ் அருகில் கிடந்த கட்டையால் ஆறுமுகத்தை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ஆறுமுகம் வீட்டில் அறையில் தூங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் அவரது மார்பில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஆயந்தூரை சேர்ந்தவர் குமார் மகன் வினோத்(வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 15–ந் தேதி காலை சவாரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆ.கூடலூரை சேர்ந்த அருள்ஜோதி மனைவி வனிதாவிற்கும், வினோத்திற்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இந்த விவகாரம் தெரிந்ததும் அருள்ஜோதி, தனது நண்பர்கள் உதவியுடன் வினோத்தை அருளவாடி தென்பெண்ணையாற்றுக்கு அழைத்துச்சென்றதும், அங்கு அவருக்கு மதுவாங்கி கொடுத்து கொலை செய்து உடலை தென்பெண்ணையாற்றில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருள்ஜோதி மற்றும் அவரது நண்பரான ஆயந்தூரை சேர்ந்த சந்திரபாலன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அருள்ஜோதியின் தம்பி ஆனந்தஜோதி(26), அருள்ஜோதியின் நண்பர்களான திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(27), அருண்பாண்டியன்(25), திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையை சேர்ந்த குமரன்(21) ஆகிய 4 பேரை காணை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது சகோதரர் செல்வம். ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றனர்.

    இவர்களிடம் தளவாய்புரம் அருகே உள்ள அம்மையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் அய்யனார் (வயது 27) என்பவர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற அய்யனார், அங்கு ரோட்டோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து பேட்டரியை எடுத்து விற்றுவிட்டு தலை மறைவானார்.

    பின்னர் மாரிமுத்துவும், செல்வமும் புளியங்குடியில் ஆட்டோ நிற்பதை கண்டறிந்து அதனை மீட்டனர்.

    இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேரும் அய்யனார் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு எச்சரித்துவிட்டு வந்துள்ளனர்.

    இதனிடையே நேற்று நடந்த தேவதானம் பெரிய கோவில் தேர்த்திரு விழாவில் பங்கேற்பதற்காக அய்யனார் வந்திருப்பதாக மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார். அப்போது அய்யனார் சேத்தூர்-தேவதானத்துக்கு இடையே உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் இருப்பது தெரியவந்தது.

    அங்கு விரைந்து சென்ற மாரிமுத்து, ஆட்டோ குறித்து அய்யனாரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

    படுகாயம் அடைந்த அய்யனாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகிறார்.

    ×