search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aval Recipes"

    • தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான்.
    • அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், நொறுக்கு தீனியும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், வடை, அப்பம், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.

    இந்த முறை அவலை வைத்து சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேர்க்கடலை - 1/4 கப்

    பொட்டு கடலை - 1/4 கப்

    அவல் - 1 கப் (250 மி.லி கப்)

    நெய்- தேவையான அளவு

    முந்திரி- 10

    திராட்சை- 10

    வெல்லம் - 3/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி


    செய்முறை:

    முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.

    இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.

    பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

    வெல்லப் பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.

    வறுத்த பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்லப் பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.

    கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடித்தால் அவல் லட்டு தயார்.

    அவலில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை முழுதாக உணரவும் உங்கள் கலோரி உட்கொள்ளலை குறைக்கவும் உதவும்.

    போஹா ஜீரணிக்க எளிதானது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • அதிக சத்துக்கள் நிறைந்த இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்

    தேங்காய் துருவல் - முக்கால் கப்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    சிவப்பு அவலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.

    பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும்.

    அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    அடுத்து இட்லி தட்டில் ஊறவைத்த சிவப்பு அவலை பரப்பி விட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.

    வேக வைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவல் சூடாக இருக்கும் போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.

    • இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப

    தேங்காய் துருவல் - கால் கப்

    செவ்வாழைப்பழம் - 2

    செய்முறை

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது.

    ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    • அவலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • காலையில் அவசரமாக வேலைக்கு செல்வர்கள் இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்

    பாசிப்பருப்பு - கால் கப்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    எண்ணெய், நெய் - தேவைக்கு

    மிளகு, சீரகம் - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    உப்பு- தேவைக்கு

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை போட்டு உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே ஆகும்.
    • இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் பொரி - 3 கப்,

    வெல்லத் தூள் - 1 கப்,

    ஏலப்பொடி, சுக்குப் பொடி - தலா 1 ஸ்பூன்,

    தேங்காய்ப் பல் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க வேண்டும்.

    பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை சிவக்க வதக்க வேண்டும். (எள் சேர்க்க விரும்புபவர்கள் 2 ஸ்பூன் எள்ளை வெறும் வாணலியில் பட பட வென்று பொரிய வறுத்து பாகில் சேர்த்துக் கொள்ளலாம்).

    பிறகு வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிப் பாகு செய்ய வேண்டும்.

    பாகில் தேங்காய் பற்கள், எள் சேர்த்து உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி ஏலம், சுக்கு சேர்த்து தட்டிலுள்ள பொரியில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கையில் அரிசிமாவு அல்லது நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

    அவ்வளவுதான் சூப்பரான அவல் பொரி உருண்டை ரெடி.

    • கிருஷ்ணருக்கு இந்த லட்டை நைவேத்தியம் செய்யலாம்.
    • இதை குழந்தைகள் விரும்பி உண்பர்; சுவையும், சத்தும் நிறைந்தது.

    தேவையான பொருட்கள்:

    அவல் - 1 கப்,

    பால் - 100 மில்லி லிட்டர்,

    வெல்லம் - 1 கப்,

    நெய் - சிறிதளவு,

    ஏலக்காய் - சிறிதளவு,

    முந்திரி - சிறிதளவு,

    பாதாம் - சிறிதளவு.

    செய்முறை:

    வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும்.

    அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!

    • வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது.
    • ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

    தேவையான பொருட்கள் :

    கெட்டி அவல் - ஒரு கப்,

    கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை - அரை கப்,

    கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,

    சர்க்கரை - சிட்டிகை,

    வறுத்த வேர்க்கடலை, முந்திரி - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

    பிறகு அவல், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி மூடி சிறிது நேரம் வேக விடவும்.

    நன்கு வெந்த பிறகு எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    மேலே வேர்க்கடலை, முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    • இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் மாவு - 1 கப்

    பால் - 500 மி.லி

    பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - தேவைக்கு ஏற்ப

    ஏலக்காய்த்தூள் - சிறிது

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

    அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

    உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.

    5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.

    • காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,

    தேங்காய்ப்பால் - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - சுவைக்கேற்ப,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

    வறுத்து பொடிக்க

    காய்ந்த மிளகாய் - 4.

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.

    நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

    தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.

    ×