என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Avudayappan"
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
- பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் எனது (ஆவுடையப்பன்) தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்கிறார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கூட்டத்தில் நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி மைக்கேல், தமயந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில அணி நிர்வாகிகள் ஆவின்ஆறுமுகம், ராஜம்ஜான், எரிக்ஜூடு, கணேஷ்குமார் ஆதித்தன், ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கண்ணன், கணேசன், அபுபக்கர், சாந்திசுபாஷ், எட்வின் வளன்அரசு, பரமசிவ அய்யப்பன், கனகராஜ், நகர செயலாளர்கள் கணேசன், சுப்பிரமனியன் என்ற மணிசூரியன், ஒன்றிய பரணி சேகர், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கே.எஸ். தங்க பாண்டியன், செல்வ கருணாநிதி, ராஜன், சுடலைக்கண்ணு, ஆரோக்கியஎட்வின், முருகன், கணேசன், சேவியர்ராஜா, ஜோசப்பெல்சி மற்றும் பலர் கலந்து கொள்கன்றனர்.
எனவே பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள்(புதன்கிழமை) மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் பாளை மகாராஜநகரில் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள்(புதன்கிழமை) மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
இதனையொட்டி அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் பாளை மகாராஜநகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி பேசுகையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். குமரியில் இருந்து மாலை 5 மணிக்கு நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு வந்தடையும் அவருக்கு அந்த பகுதியில் ராதாபுரம் தொகுதி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
இதேபோல் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே அந்த தொகுதி சார்பிலும், பொன்னாக்குடி விலக்கு அருகே அம்பை தொகுதி மற்றும் பாளை ஒன்றியங்கள் இணைந்தும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட பொரு ளாளர் ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நகராட்சி சேர்மன்கள் பிரபாகர பாண்டியன், செல்வசுரேஷ் பெருமாள், சாந்தி, பேரூராட்சி தலைவர் தமயந்தி, யூனியன் தலைவர்கள் பரணி சேகர், கே.எஸ்.தங்கபாண்டியன், சேவியர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், பி.சி. ராஜன், சுடலைகண்ணு, வேலன்குளம் முருகன், முத்து பாண்டி என்ற பிரபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் கலைஞர் கருணாநிதி நினைவை போற்றும் வகையில் நாளை (7-ந் தேதி) களக்காடு அண்ணா சிலை முன்பு கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு பகுதி களில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மத்திய மாவட்டம்
இதே போல் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனு சரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நாளை காலை கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேலும் மத்திய மாவட்டத்திற்கு உட்பட மாநகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகங்கள் தோறும் கலைஞரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்