என் மலர்
நீங்கள் தேடியது "Award"
- தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.
விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாரதிய பாஷா விருது பெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அளவில் புகழ்மிக்க #BharatiyaBhashaParishad அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, #SahityaAkademi, #இயல், #கலைஞர்_பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
- 21 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றியதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.
இதுவரை 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:
சவுதி அரேபியா: ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்
ஆப்கானிஸ்தான்: ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்
பாலஸ்தீனம்: கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது
மாலத்தீவு: ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்
ஐக்கிய அரபு அமீரகம்: ஆர்டர் ஆஃப் சயீத் விருது
பஹ்ரைன்: கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்
அமெரிக்கா: லெஜியன் ஆஃப் தி மெரிட்
பிஜி: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி
பப்புவா நியூ கினியா: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ
பலாவ்: பலாவ் குடியரசு எபகல் விருது
எகிப்து: ஆர்டர் ஆப் தி நைல்
பிரான்ஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்
கிரீஸ்: தி கிரான்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர்
பூடான்: ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ
ரஷியா: ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது
நைஜீரியா: கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்
டொமினிகா: டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்
கயானா: ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பார்படாஸ்: ஹானரி ஆப் பிரீடம்
குவைத்: தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்
மொரிஷியஸ்: ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர்
- மொரீஷியசில் தலைவர்கள், இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடினார்.
- மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போர்ட் லூயிஸ்:
மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மொரீஷியசுக்கு நேற்று புறப்பட்டார். தீவு நாடான மொரீஷியசை சென்றடைந்ததும், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நீங்கள் எப்போதெல்லாம் எங்கள் நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள். மொரீஷியஸ் நாட்டில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
இந்த விருது பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இது எனக்கான கவுரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கவுரவம். இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி விருது பெறும் நிகழ்வை காண்பதற்காக மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து விருதினை வழங்கினார்.
- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோவிற்கு விருது வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் "டிரஸ்ட்" குழந்தைகள் இல்ல நிறுவனர் திருமாறன் நடத்திய விழாவில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு சிறந்த கண் தான சேவைக்கான விருதினை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், அரிமா 324-எ மாவட்டத்தினுடைய கண்தான ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிற்கு வழங்கினார்.
விழாவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் லட்சுமி சேகர், ரத்ததான மாவட்ட தலைவர் ஆசிரியர் திருமலை கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பயிற்சி, வேலை வாய்ப்புக்கான விருது பெங்களூருவில் வழங்கப்பட்டது.
- மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.
சிவகாசி
கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது.
இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரிக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.
பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையானது முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு துறை சார்ந்த மற்றும் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.
சிறந்த முறையில் செயலாற்றிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார், முதல்வர் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.
- வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருைத கீழ்காணும் தகுதிகள் உள்ள பெண் குழந்தைகளிடம் இருந்து கருத்துருக்களை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண்,குழந்தை (31 டிசம்பர்-ன்படி), கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பெண் குழந்தைகள் விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை மதுரை மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி.எண் 0452-2580259-க்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
- மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
தமிழக அரசு மாநில அளவில் சிறந்த இளம் ஜவுளி வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது. இதற்காக, மாவட்டம்தோறும், வடிவமைப்பாளர்களிடமிருந்து சேலைகளில் இடம்பெறும்வகையிலான புதுமையான மற்றும் அழகிய டிசைன்கள் பெறப்பட்டு வருகிறது.
கடந்த 6ந் தேதி டிசைன்களை அனுப்புவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.loomworld.in என்கிற தளத்தில், வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். திருப்பூர் பகுதி வடிவமைப்பாளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20ந் தேதிக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
இது குறித்து மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் வெற்றிவேல் கூறியதாவது:-
சிறந்த ஜவுளி டிசைனர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான டிசைனர்கள் உள்ளனர். ஆயினும் மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நிப்ட்-டீ கல்லூரி மாணவர் ஏராளமானோர், புதுமையான பின்னலாடை டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். அம்மாணவர்கள், விருதுக்கு தங்கள் டிசைன்களை சமர்ப்பிக்க ஆர்வம்காட்டவேண்டும். சிறந்த டிசைன்களை உருவாக்கி பின்னலாடை நகரான திருப்பூருக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
- தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் நடை பெற்ற 1037-ம் ஆண்டு சதயவிழாவில் மாமன்னன் ராசராசன் விருது தஞ்சை மைய பேராசிரியர் ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் மற்றும் தஞ்சை அகத்திய சன்மார்க்க சங்க செயலர் சிவ. அமிர்தலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மாமன்னன் ராசராசன் விருது பெற்றவர்களுக்கு இன்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் பாராட்டு விழா நடை பெற்றது.
விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.தஞ்சை பூண்டி கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் ராஜேஸ்வரி வாழ்த்தி பேசினார். தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனை வரையும் வரவேற்றார்.
விழாவில் முடிவில் தஞ்சாவூர் சோழன் லேப் செல்வராஜன் நன்றி கூறினார்.பாராட்டு விழாவை தொடர்ந்து இந்த அரங்கில் சைவ சித்தாந்த வகுப்பு திருக்குறளில் சைவ சித்தாந்தம் எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
- நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது.
திருப்பூர் :
டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்ததினமான நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் பணி பற்றி நினைவு கூறப்பட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தலா 3 நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது. இதில் திருப்பூர் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர்(பால்வளம்), உதவிப்பொது மேலாளர், குழுத்தலைவர்கள், ஒன்றிய பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
- சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எனது குப்பை எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
- வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு பட்டத்து அரசன் என்ற திரைப்படம் கடந்த 25-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதைவிட முக்கிய கதை பாத்திரங்களில் ராஜ்கிரன், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிங். முருகா, அதே பகுதியை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சிங். கோகுல், சிவானிசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டை சேர்ந்த சற்குணம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட 6 படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.
இதில் வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மற்றும் படத்தில் நடித்த வல்லத்தை சேர்ந்த சிங். முருகா ஆகியோர் தஞ்சையில் உள்ள விஜயா தியேட்டருக்கு வந்தனர்.அவர்களுக்கு தஞ்சை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
அப்போது இயக்குனர் சற்குணம் அளித்த பேட்டியில், பட்டத்து அரசன் நான் இயக்கிய ஏழாவது திரைப்படம் ஆகும்.
அடுத்து ஒரு வெப் சீரியல் இயக்குகிறேன்.அதனை தொடர்ந்து நான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
நடிகர் சிங். முருகா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.மேலும் குழந்தை நட்சத்திரங்களாக நமது பகுதியை சேர்ந்த சிங் .கோகுல், சிவானிசிங் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.
படத்தை இயக்கிய சற்குணமும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.நான் அடுத்து வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் அடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
- திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
- ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி
திருச்சி
மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஐ.ஐ. தங்கச்சங்கிலி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், அதன் முழுமையான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரவலுக்கு வலுவான விநியோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வாழை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வாழை வர்த்தகச் சுற்றுச்சூழலில் விநியோக சங்கிலி முலமாக செயல்பட்டதற்கும் ஒருங்கிணைந்த சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது வழங்கப்பட்டது.
இதனை மகாராஷ்டிரா மாநில கவர்னர் வழங்கி பேசுகையில், விவசாயத்தில் சிறந்த குளிர்பதன வசதிகள், உண்மையில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானம் மற்றும் நாட்டிற்கு செழிப்பை வழங்குவதற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
தேசிய மழைநீர் ஆணையம் மற்றும் விருதுக் குழுவின் நடுவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் தல்வாய், தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு ஆகியவை வலுவான குளிர் சங்கிலி மற்றும் விரிவான இணைப்புகளுடன் கூடிய சிறந்த தளவாடங்கள் மூலமாக சாத்தியமாகும் என்று விளக்கினர்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர், முனைவர் எஸ். உமா கூறுகையில், சுமார் ரூ.700 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள அளவிலேயே வளைகுடா நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான கொள்கை, தரமான உற்பத்தி மற்றும் விரிவான விநியோகச் சங்கிலி இருப்பதன் மூலம், இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்குக்கு உயர்த்த வாய்ப்பு உள்ளது.
வாழை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வாழை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுக்கு இந்த மையம் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி வருவதால் இந்த விருது அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றார்.
விழாவில் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய காலநிலை கண்டுபிடிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகளும் நடத்தப்பட்டன.