என் மலர்
நீங்கள் தேடியது "Awareness Camp"
- கடனுதவிகள் குறித்து விளக்கினர்
- சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கிகார். காசாளர் அகிலா முன்னிலை வகித்தார்.
கூட்டுறவு வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் சிறு வணிகக் கடன், மகளிர் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் குறித்து விளக்கிக் கூறினார்.
சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் ஒரு நபருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி அரசு தொடக்க பள்ளியில் சேரம்பாடி போலீசார் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், விஜயன், சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ் ஆகியோர் பேசும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற வேண்டும் என்றனர். முடிவில் ஆசிரியர் சதீஸ் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- நோய் தடுப்பு மற்றும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
- ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் திட்டம் 2022-23 ம் நிதியாண்டில் நடைமுறை படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள் சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நவம்பர் 2022 மாதம் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரை கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ராஜபாளையம் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இந்த முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசுக ளையும், சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை வளர்ச்சிக்கு எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
தற்போது மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஊசிகள், மருந்துகள் என அனைத்தும் கட்டணமில்லாமல் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.
மேலும் அனைத்து கிராமங்களிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் கால்நடை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் சேகர், பயனாளிகள், பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
- வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சிவகிரி:
தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கால்நடைகளுக்கு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தப்ப ட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குமாரி, தலைமை கால்நடை மருத்துவர் கருப்பையா, கிளை செயலாளர் கார்த்திக், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியதில் உள்ள கிழவனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், கிழவனேரி பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக், உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, மோகன், ஆய்வாளர் வீரன் மற்றும் கால்நடை உதவியாளர்கள் செந்தில்வேல், விஜயராணி கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 105 விவசாயிகள் பயனடைந்தனர். 116 மாடுகளுக்கும், 416 வெள்ளாடுகளுக்கும், 524 செம்மறியாடுகளுக்கும், 16 நாய்களுக்கும், 286 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர்கள் மட்கும் , மட்காத குப்பை பற்றி விளக்கம் அளித்தனர்.
தென்காசி:
தென்காசி நகராட்சியின் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளி முதல்வர் ஏசுபாலன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு மட்கும் குப்பை, மட்காத குப்பை பற்றி விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயன்படுத்திய பின் இருக்கும் கழிவு பொருட்களை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து நகராட்சி பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று தூய்மை பாரத இயக்கத்தின் பணியாளர் கேட்டு கொண்டனர். மாணவ-மாணவிகள் தங்கள் வீட்டில் உள்ள கழிவு பொருட்களை தரம் பிரித்து கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.
- குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடந்தது
- 904 மாடுகளுக்கு சிகிச்சை
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி சாமியார்மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.சிவகவி, இ.தமிழ்சசெல்வி, எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கல்லப்பாடி கால்நடை மருத்துவர் எம்.ரமேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இந்த முகாமில் பசுமாடுகள், காளைமாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் என 904 கால்நடைகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றன.
நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா மற்றும் பிளாரன்ஸ் விமலா கலந்து கொண்டனர். கழிப்பறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கழிப்பறைகளை எப்படி பராமரிக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளினால் சுகாதாரம் எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா எடுத்துக் கூறினார்.
பின்பு உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை நடை பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிதம்பரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினர்
- சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறார் நிதி-குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் சிறார் நிதி மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
முகாமில் அவர் பேசியதாவது:-
மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் தன்னைவிட வேறு ஆள் இல்லை என்பது போன்ற தவறான புரிதல் மூலம் தங்களை வீணாக்கி கொள்வதுடன், பெற்றோர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மாணவர் சமுதாயம் சீரழிந்து வருவதை தடுக்கும் வகையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில், ஒழுக்கத்துடன் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்து, சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மையில் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், யோகா மருத்துவர் தங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், பள்ளி முதல்வர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மதுரை பேச்சிக்குளத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிக்குளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இயக்குநர் சரவணன் மற்றும் இணை இயக்குநர் நடராஜன் ஆகியோரின் ஆலோசனைப்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கால்நடை மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். பேச்சிக்குளம் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி வாசு, துணைத்தலைவர் கார்த்திக் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளை கழிதல் தடுப்பூசியும், கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்குழு நீக்கம் மருந்து கொடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்து மாவு,பதப்படுத்திய புல் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. இது தவிர சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
முகாமில் ஊமச்சிகுளம், பேச்சிக்குளம், வீரபாண்டி ஊராட்சி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர்கள் கலைவாணி,கோவிந்தன், சுகப்பிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலாவதி, ஜெயதேவி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் செய்யாமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மேலக்கொடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரகேசரி, கால்நடை உதவியாளர் அழகுமீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 142 மாடுகள், 483 வெள்ளாடுகள், 892 செம்மறியாடுகள், 21 நாய்கள், 386 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.