search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayushman Bharat health insurance scheme"

    • ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
    • இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    அப்போது, "70 வயதை கடந்த அனைத்து இந்திய மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பலனடைந்து வருவதாக" திரவுபதி முர்மு தெரிவித்தார்.

    ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×